கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது பழமொழி. ஆனால், “ஏசி இல்லாத வீட்டில் வாழ்க்கை படமாட்டேன்” என்பதுதான் தற்கால இளம் பெண்களுக்கு புதுமொழியாக உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், மணமகன் வீட்டில் ஏசி இல்லை என்பதால், திருமணத்திற்கு முந்தைய நாள், மணமகள் திருமணத்தை நிறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில், இளம் பெண் ஒருவருக்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள், பெண் அழைப்பு நடைபெற்றது. பெண்ணை அழைத்துக் கொண்டு மணமகன் வீட்டார் தங்களுடைய வீட்டுக்குக் அழைத்து வந்த போது, மணமகன் வீட்டில் ஒரு ஏசி கூட இல்லையா? இவ்வளவு வெப்பமாக இருக்கிறதே, இதில் எனக்கு மூச்சு முட்டுகிறது. உடனே ஏசி ஏற்பாடு செய்யவும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு மணமகனும், அவரது குடும்பத்தினரும் நக்கலாக ஏதோ பதிலளித்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அதிருப்தியடைந்த மணமகள், உடனே திருமணத்தை நிறுத்திவிட்டு, மணமகன் வீட்டிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, “அடிப்படை வசதி கூட இல்லாத வீட்டில் நான் எப்படி வாழ்க்கை நடத்துவேன்?” என்று மணமகள் தன் பெற்றோரிடம் கூறிவிட்டு, “இந்த வீட்டில் நான் திருமணம் செய்து வந்தால், என் வாழ்க்கை நரகமாகிவிடும்” என்று தெரிவித்தார். அதன் காரணமாகவே, திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறை அதிகாரிகள் மணமகளிடம் பேசி சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், மறுநாள் நடைபெற வேண்டிய திருமணம் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மணமகன் வீட்டார், “தாங்கள் திருமணத்திற்காக செய்த செலவை கொடுக்க வேண்டும்” என்று கேட்டனர். போலீசார் முன்னிலையில் சமரசம் ஏற்பட்டு, அந்த தொகையை மணமகள் வீட்டார் வழங்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து, ஒரே ஒரு ஏசி இல்லாததாலேயே திருமணம் நின்றுவிட்டது.
இது குறித்து சமூக ஆர்வலர் விஷால் சர்மா, தனது சமூக வலைத்தளங்களில் கூறிய போது, “இது ஒரு சமூக பிரச்சனை மட்டும் அல்ல. காலத்தின் மாற்றம், வெப்பம் என்பது இனிமேல் ஒரு சிரமமான விஷயமாக இருக்கும். ஏசி என்பது இனிமேல் ஆடம்பரம் அல்ல, அது அத்தியாவசியமாகிவிட்டது. எதிர்காலத்தில் இவை போன்ற சம்பவங்கள் அதிகம் நிகழலாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.