அமெரிக்க சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மெதுவடை தேங்காய் சட்னி கொடுத்த இந்திய பெண்..! இப்படி ஒரு உணவா என ஆச்சரியம்..!

  அமெரிக்காவில் சாலை போடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு, இந்திய பெண் ஒருவர் மெதுவடை மற்றும் தேங்காய் சட்னி உணவாக அளித்த நிலையில், அதை பார்த்த அந்த தொழிலாளர்கள், “இப்படி ஒரு உணவா! நாங்கள்…

vada

 

அமெரிக்காவில் சாலை போடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு, இந்திய பெண் ஒருவர் மெதுவடை மற்றும் தேங்காய் சட்னி உணவாக அளித்த நிலையில், அதை பார்த்த அந்த தொழிலாளர்கள், “இப்படி ஒரு உணவா! நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை. மிகவும் டேஸ்ட்டாக இருக்கிறது” என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில், மின்னசொட்டா என்ற மாகாணத்தில் சாலையில் ஊழியர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது, தொழிலாளர்கள் மிகவும் சோர்வாக இருப்பதை பார்த்த அந்த பகுதியை உள்ள இந்திய பெண் ஒருவர் உடனே தனது வீட்டில் மெதுவடை மற்றும் தேங்காய் சட்னி செய்து, அவர்கள் அனைவருக்கும் பரிமாறினார்.

முதலில் அவர் கொடுத்த உணவை பார்த்து ஆச்சரியப்பட்ட தொழிலாளர்கள், “இது என்ன?” என்று கேட்டனர். இதற்கு பெயர் மெதுவடை. உங்கள் ஊரில் உள்ள டோனெட்டுகள் போல் இருக்கும், ஆனால் அதே நேரத்தில் இது இனிப்பாக இருக்காது; காரமாக இருக்கும் என்று கூறினார்.

அவர் கூறியதை காட்டு ஆச்சரியப்பட்டு, இதுவரை மெதுவடையே பார்த்திராத அந்த ஊழியர்கள் எடுத்து சாப்பிட்டவுடன், “மிகவும் அருமையாக இருக்கிறது! இதை எப்படி தயாரித்தீர்கள்?” என்று தயாரிப்பு முறைகளையும் கேட்டு தெரிந்து கொண்டனர்.

அது மட்டும் அல்ல, “நீங்கள் மிகவும் அன்பானவர். எங்கள் மீது மரியாதை வைத்து உணவை தந்ததற்கு மிகவும் நன்றி. அதுவும், இது போன்ற நாங்கள் பார்க்கவே பார்த்திராத உணவை கொடுத்ததற்கு நன்றி” என்று கூறினர்.

இந்த வீடியோவை அந்த சாலை பணிகளை காண்ட்ராக்ட் எடுத்த நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றது.

இதற்கு இந்தியர்கள் பல கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். இது இந்தியாவின் அழகான கலாச்சாரம். இந்தியர் வீட்டுக்கு யாராவது சென்றால், உணவும் தண்ணீரும் கொடுப்பது என்பது சாதாரணமானது; அமெரிக்காவில் தான் இது புதுவிதமாக உள்ளது என்று தெரிவித்தனர்.

“இந்தியாவில் இதை அனைவரும் செய்கிறீர்கள் என்றாலும், மற்ற நாடுகளில் இது ஆச்சரியம் தான்” என்று தெரிவித்தார்.

இந்தியாவின் மெதுவடை அமெரிக்கா வரை சென்றுள்ளது என்று பல்வேறு விதமான கருத்துக்கள் பதிவாகி வருகிறது.

https://www.facebook.com/watch/?v=1247586413631163