தமிழகத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரி பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியாவிட்டால் இதை படியுங்க…!

Published:

தமிழகத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஏன் ஆசியாவிலேயே முதல் பெண் பேருந்து ஓட்டுனர் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஓட்டுநர் வசந்தகுமாரி என்பவர் ஆவார்.

images 3 19

தன்னுடைய 14ஆம் வயதிலேயே வாகனங்களை ஓட்டுவதற்கு பயிற்சி பெற்றவர் இவர். சிறுவயதிலேயே தாயை இழந்த இவரது வாழ்க்கை போராட்டமாக மாறியது.

தந்தை வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகு உறவினர்கள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை இவரை கட்டுமான தொழிலாளி ஒருவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்துள்ளார். இவரது கணவருக்கு ஏற்கனவே நான்கு பெண் பிள்ளைகள் இருந்துள்ளார்கள். இவருக்கு திருமணம் நடைபெற்ற பொழுது வெறும் 19 வயது தான். இரண்டு பெண் பிள்ளைகளை பெற்ற நிலையில் கன்னியாகுமரியில் உள்ள மகிளா மன்றத்தின் உதவியோடு கனரக வாகனங்களை ஓட்டுதலில் பயிற்சி பெற்றார். கனரக வாகன ஓட்டுநர் உரிமத்தையும் பெற்றார்.

images 3 16 1 1

வாகனம் ஓட்டுதலில் நல்ல திறமை இருந்தும் பல்வேறு இடங்களில் பணிக்காக விண்ணப்பம் செய்தும் நிராகரிக்கப்பட்டுள்ளார். 1993 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக் காலத்தில் பணி வேண்டி கோரிக்கை வைத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பேருந்து ஓட்டுநராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1993 பணி நியமனம் செய்யப்பட்ட இவர் 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் அரசு பேருந்து ஓட்டுனராக பணியில் இருந்து உள்ளார். இவர் இவரது சாதனைக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

images 2 31

இப்பொழுது பேருந்து ஓட்டுவதற்கு ஆர்வம் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

மேலும் உங்களுக்காக...