இந்திய ரயில்களில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய பேஷியல் சாதனம்.. ஒவ்வொரு ரயிலிலும் 8 கேமிராக்கள்..!

Published:

இந்திய ரயில்களில் பயணிகள் முகத்தை ஸ்கேன் செய்யும் சாதனம் பொருத்தப்படும் என்றும் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய எட்டு கேமராக்கள் ஒவ்வொரு ரயிலிலும் பொருத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் ரயில்வே அவ்வப்போது புதிய வசதிகளை பயணிகளுக்காக செய்து வரும் நிலையில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ரயிலிலும் எட்டு 4கே கேமராக்கள் பொருத்தப்பட இருப்பதாகவும், ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த கேமராக்களில் பயணிகளின் முகம் பதிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

பதிவு செய்யப்படும் முகங்கள் சில நொடிகளில் ஆய்வு செய்யப்பட்டு அதில் குற்றவாளிகள் யாராவது இருக்கிறார்களா என்பது கண்டுபிடிக்கப்படும் என்றும் இதன் காரணமாக ரயிலில் ஏற்படும் குற்றங்கள் தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள ரயில்களில் ஏஐ கேமராக்கள் பொருத்த கொரிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல் கட்டமாக 38,255 ரயில்களில் எட்டு கேமராக்கள் பொருத்தும் திட்டம் செயல்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் பாதுகாப்பு அம்சம் காரணமாக ரயில்களில் பயணிகள் நிம்மதியாக பயணம் செய்ய முடியும் என்றும் ஆபத்துக்கள் குறையும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் பேசியல் ஸ்கேன் செய்வதன் மூலம் பயணிகளின் தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்படும் என்றும் பயணிகளின் தனிப்பட்ட தரவுகளுக்கு ஆபத்து என்றும் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த நடைமுறையை செயல்படுத்த இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களையும் இந்த வசதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...