அந்த அம்மா இப்ப வந்தாலும் கல்யாணம் பண்ணிப்பேன்.. பழைய காதலை நினைவு கூர்ந்த பாரதிராஜா..

Published:

தமிழ் சினிமாவின் வரலாற்றை பாரதிராஜா வருகைக்கு முன், பாரதிராஜா வருகைக்குப்பின் என இரு வகையாகப் பிரிக்கலாம். கிராமத்து வாசனையே தெரியாமல், ஸ்டுடியோவுக்குள் கிராமத்து செட் போட்டு முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவினை முதன் முதலாக வயல்வெளியலும், புழுதிக் காட்டிலும், கால்நடைகளுடனும், வெள்ளந்தி மனிதர்களுடன் கலந்து விட்டவர். 16 வயதினிலே படத்தில் ஆரம்பித்து மீண்டும் முதல் மரியாதை வரை தமிழ்சினிமாவில் அத்தனை காதலையும் சொல்லியவர்.

அலைகள் ஓய்வதில்லை, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை, மண் வாசனை, நிறம் மாறாத பூக்கள், காதல் ஓவியம், கல்லுக்குள் ஈரம் என காதலை டிசைன் டிசைனாகச் சொல்லி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத பல படைப்புகளை உருவாக்கித் தந்தவர். இப்படி காதல் ரசம் சொட்டச் சொட்ட பாரதிராஜாவுக்கு அவரின் இளமைப் பருவத்தில் காதல் இல்லாமலா போயிருக்கும்.

பாரதிராஜாவும் காதல்வயப்பட்டிருக்கிறார். தனது இளமைப் பருவக் காதலை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பாரதிராஜா. எனது திருமணத்திற்கு முன்னதாக நான் வேறொரு பெண்ணைக் காதலித்ததாகவும், சுவெரெல்லாம் அவளது பெயரை எழுதி வைத்திருந்தேன் எனவும் ஆனால் அந்தக் காதல் கடைசிவரை கை கூடவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

ரூ.5000 கோடி செலவு செய்து திருமணம்.. 42,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய ரிலையன்ஸ்..!

ஒருமுறை பல வருடங்கள் கழித்து பின்னால் அவரின் சடையை வைத்தே அவரை அடையாளம் கண்டு பார்த்த போது எனது மனம் சிலாகித்துப் போனதாகக் குறிப்பிட்டிருக்கிறார் பாரதிராஜா.

மேலும் தான் காதலித்த அந்தப் பெண்மணி ஒருமுறை என் வீட்டிற்கு அவள் பேத்திக்கு திருமணம் என்று அழைப்பிதழ் கொடுக்க வந்த போது என் வீட்டுச் சமையலறையில் உள்ளே நுழைந்து எனக்கும், என் அம்மாவுக்கும் காபி போட்டுக் கொடுத்தார் என்றும் அந்த ஒரு காபியிலேயே எனது காதல் முழுமையடைந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார் பாரதிராஜா. இதுமட்டுமன்றி சொல்லக் கூடாது இருந்தாலும் சொல்கிறேன்.. இப்போதும் அவர் வந்தால் நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்றும் கூறியிருக்கிறார் பாரதிராஜா.

இவரின் காதல் படைப்புகள் எங்கிருந்து வந்தது என இப்போது புரிகிறதா?

மேலும் உங்களுக்காக...