என் கதை முடியும் நேரமிது.. இந்தியாவில் இனி ஓய்வு வயது 60 அல்ல.. வெறும் 40 தான்.. ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்..!

  இந்தியாவில் பல பெரிய நிறுவனங்கள், இனி 60 வயதை ஓய்வு வயதாக கருதுவதில்லை. மாறாக, 42 முதல் 45 வயதிலேயே பணியாளர்களை ஓய்வு பெற செய்யும் போக்கை தொடங்கிவிட்டன. அதாவது, நிறுவனங்கள் வயதான…

retirement

 

இந்தியாவில் பல பெரிய நிறுவனங்கள், இனி 60 வயதை ஓய்வு வயதாக கருதுவதில்லை. மாறாக, 42 முதல் 45 வயதிலேயே பணியாளர்களை ஓய்வு பெற செய்யும் போக்கை தொடங்கிவிட்டன. அதாவது, நிறுவனங்கள் வயதான ஊழியர்களை இனி ஒரு சுமையாகவே பார்க்கின்றன. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி காரணமாக, பல வேலைகள் வேகமாக மாறி வருகின்றன. இது அனைத்து மட்டங்களிலும் உள்ள ஊழியர்களை பாதிக்கிறது.

40 வயதில் உங்களிடம் முதலீடுகள், வாடகை வருமானம் தரும் சொத்துகள் போன்ற வேறு வருமான வழிகள் இல்லையென்றால், இந்த திடீர் பணி நீக்கம் உங்கள் குடும்பத்தின் நிதி எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள். நாற்பதுகளில் திடீரென வேலையை இழப்பது, சம்பளம் இல்லாத, எதிர்பாராத ஓய்வுக்கு வழிவகுக்கும்.

இதுகுறித்து ஆய்வு செய்த நிறுவனம் ஒன்று கூறியபோது, “பெரிய நிறுவனங்களில் ஓய்வு பெறும் வயது இப்போது 60 இல்லை, அது 42 முதல் 45 வரை தான். இந்த வயதிலுள்ளவர்களை நிறுவனங்கள் பணி நீக்கம் செய்கின்றன. ஏனெனில், நிதித் துறை அவர்களை ஒரு சுமை என்று அழைக்கிறது.

இந்தப் பதிவுக்கு இணையத்தில் பரவலான விவாதம் எழுந்துள்ளது. ஒரு பயனர், “45 வயதில் இதை உணரும்போது, வேறு வழிகளில் பணம் சம்பாதிக்க கற்க அவர்களுக்கு நேரமும், சக்தியும் இருக்காது. வேலை கிடைக்காததால் தொழில் தொடங்கி தோல்வியடைகிறார்கள். இது வாழ்க்கையின் கசப்பான உண்மை,” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

இன்னொருவர், “இதை கண்டு பயப்படுவதற்கு பதில், அடுத்த 20-30 ஆண்டுகளுக்கு நமது வாழ்க்கையையும், திறன்களையும் எப்படி பயனுள்ளதாக்குவது என்று சிந்திக்க வேண்டும். முதலீடுகள் முக்கியம் என்று யோசனை தெரிவித்தார்.

வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே ஒரு பகுதிநேர தொழிலை தொடங்கி, முடிந்தவரை விரைவில் அதை முழுநேர தொழிலாக மாற்றுவதே இந்த அபாயத்தை தவிர்ப்பதற்கான ஒரே வழி என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றும் ஒரு கருத்து வலுவாக பதிவாகியுள்ளது.

கோவிட்-க்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகிவிட்டதாக மற்றொருவர் கூறுகிறார். “நிறுவனங்கள் இப்போது 30 வயதுகளில் உள்ளவர்களை பாதி சம்பளத்திற்கு, அதிக வேலை செய்யக் கூடியவர்களாக பெற முடியும். இந்திய கார்ப்பரேட் துறை அரசியல் மற்றும் அடிமைத்தனமான அணுகுமுறையால் அழிந்துவிட்டது,” என்று வேதனை தெரிவித்தார்.

ஐரோப்பா, அமெரிக்காவில் நிலைமை வேறு என்றும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். “அங்கு மக்கள் தங்கள் அனுபவம், நிபுணத்துவம், தலைமைத்துவ திறன்கள் காரணமாக விரும்பிய காலம் வரை வேலை செய்யலாம். அனுபவமுள்ளவர்களை வெளியேற்ற அங்குள்ள நிறுவனங்கள் தயங்குகின்றன,” என்று ஒருவர் குறிப்பிட்டார்.

பல துறைகளில் செலவுகளை குறைக்க நிறுவனங்கள் இயந்திரங்களையும், மென்பொருளையும் அதிகம் சார்ந்து வருவதால், மாறிவரும் வேலை சூழலில் ஒரு முழுநேர வேலை இனி புத்திசாலித்தனமான பாதையாக இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது.