ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள வேளானூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மைக்செட் கலைஞர் ராம்பிரபு. பொறியியல் பட்டதாரியான இவர், சிறுவயது முதலே மைக்செட் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். இவரது தந்தை ஆசிரியராக இருக்கும்போதே பகுதி நேரமாக மைக்செட் அமைக்கும் தொழிலை செய்து வந்துள்ளார்.
தந்தையை பின்பற்றி ராம் பிரபுவுக்கும் 4,5 வயது முதலே மைக்செட் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தற்போது தூத்துக்குடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பிளான்ட் என்ஜினியராக பணிபுரிந்துவரும் ராம் பிரபு, விவசாயமும் செய்கிறார். பகுதி நேரமாக மைக்செட் அமைக்கும் தொழிலையும் செய்து வருகிறார்.

மைக்செட் அமைப்பது மட்டுமின்றி இவர் நன்றாக பாடவும் செய்வார். எந்த இசைக்கருவிகளும் இல்லாமல் இசைக்கருவிகளின் சப்தத்தை வாய் மூலமாகே வாசிக்கிறார். மேலும் இவர் இன்னிசைக் குழு ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இவர் தற்போது பகுதி நேரமாக எல்பி ரெக்கார்ட்டுகள் சேகரிப்பது, எல்பி ரெக்கார்டரில் மைக்செட் அமைப்பது, நிகழ்ச்சிகளுக்கு ஒளி-ஒலி அமைப்பது, நிகழ்ச்சிகளில் இன்னிசைக் குழு மூலம் பாடல் பாடுவது ஆகியவற்றையும் செய்து வருகிறார். இவரது பேட்டியை கீழே உள்ள யூடியூப் வீடியோவில் காணலாம்.
தொடர்புக்கு:
ராம் பிரபு
+919629838708
வேளானூர், ராமநாதபுரம்.