படித்து முடித்துவிட்டு இந்தியா திரும்புவேன் என்று ஏன் சொல்லவில்லை.. இந்திய மாணவருக்கு அமெரிக்க விசா மறுப்பு..!

  படித்து முடித்துவிட்டு இந்தியா திரும்புவேன் என்று ஏன் சொல்லவில்லை என்ற கேள்வியை கேட்டு தூதரக அதிகாரி இந்திய மாணவருக்கு அமெரிக்க விசா அளிக்க மறுத்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில்,…

usa visa

 

படித்து முடித்துவிட்டு இந்தியா திரும்புவேன் என்று ஏன் சொல்லவில்லை என்ற கேள்வியை கேட்டு தூதரக அதிகாரி இந்திய மாணவருக்கு அமெரிக்க விசா அளிக்க மறுத்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், எஃப்1 விசாவிற்காக சமீபத்தில் நேர்காணல் சென்ற மாணவர் ஒருவர், Section 214(b) விதியின் கீழ் தனக்கு விசா கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

2025 ஏப்ரலில் இளநிலை பட்டத்தை முடித்த பிறகு, டேட்டா சயன்ஸ் மாஸ்டர் படிப்புக்காக அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்திருந்தார். பின்னர் விசா குறித்த நேர்காணலில் விசா அதிகாரி ஆரம்பத்தில் சாதாரண கல்வி மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகள் குறித்த கேள்விகள் கேட்க, அதைத் தொடர்ந்து திடீரென தொழில்நுட்ப ரீதியான சிக்கலான கேள்விகள் எழுப்பினார். மாணவர் அமைதியாகவும் தெளிவாகவும் பதிலளித்தாலும், அதிகாரி விசாவை மறுத்ததாக ரெடிட் தளத்தில் கூறியுள்ளார். அவர் கூறியது இதுதான்:

நான் ஐதராபாத் தூதரகத்தில் எஃப்1 விசா நேர்காணலுக்குச் சென்றேன். அங்கு இருந்த ஒரு விசா வழங்கும் அதிகாரி என்னிடம் நேர்காணல் நடத்தினார்.

விசா அதிகாரி: இன்னும் படிக்கிறீர்களா?
நான்: இல்லை, 2025 ஏப்ரலில் என் இளநிலை பட்டம் முடிந்துவிட்டது.

விசா அதிகாரி: எந்தெந்த பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளீர்கள்?
நான்: Indiana University Bloomington, University of Colorado Boulder, Northeastern University, Arizona State University, University of Florida, University of Washington.

விசா அதிகாரி: உங்கள் திட்டம் (Project) பற்றி கூறுங்கள்.
நான் என் திட்டம், அதில் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள், என்ன கற்றேன் என்பதை விளக்கினேன்.”

விசா அதிகாரி: “நீங்கள் கோடிங் அறிவீர்களா?”
நான்: சராசரி அளவில் தெரியும்.

விசா அதிகாரி: “Array மற்றும் Linked List என்ன வித்தியாசம்? Linear Regression என்பது என்ன?”
நான்: மீண்டும் அதே பட்டியலை கூறினேன்.

விசா அதிகாரி: “ஏன் Indiana University Bloomington?”
நான்: டேட்டா சயன்ஸ் துறையில் மிகப்பழமையான மற்றும் நிலைத்திருக்கின்ற ஒரு பிரிவு. Applied DS, Computational DS, Analytical DS போன்ற பல துறைகளில் சிறப்பு பயிற்சிகள் உள்ளன.”

“Applied Data Science என்பதைத் தேர்ந்தெடுத்தேன், ஏனெனில் இது தொழில்முகப்புத்துவமான பாடங்களை வழங்குகிறது, இது என் தொழில் இலக்குகளுடன் பொருந்துகிறது.”

அதில் அதிகாரி “மன்னிக்கவும், உங்கள் விசா மறுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

இந்த அனுபவத்தைப் பார்த்த பலர் ’படிப்பை முடித்துவிட்டு என் நாட்டிற்கு திரும்பி வந்து வேலை தேடுவேன். என் படிப்பு என் நாட்டில் வேலைக்கு உதவும்’ என்று சொல்வது அவசியம். நீங்கள் படிப்பு முடித்ததும் நாடு திரும்புவீர்கள் என்று எங்கும் சொல்லவில்லை. அதனால் தான் விசா கிடைக்கவில்லை என கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.