ஒரு உக்ரைனிய பாதுகாப்பு அதிகாரி இந்த தாக்குதல் குறித்து கூறிய போது ரஷ்ய விமான தளங்களை உள்ள முக்கிய போர் விமானங்களை தாக்குவதற்காக வெடிகுண்டுகள் நிரப்பிய ட்ரோன்கள் மரத்தின் கூட்டங்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டன. இவை லாரிகளில் மரமோடு மரமாக ஏற்றி, ரஷ்ய விமான தளங்களின் ஓரத்தில் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், கூடங்களின் மேல்தளங்கள் ரிமோட் கட்டுப்பாட்டின் மூலம் திறக்கப்பட்டதும், ட்ரோன்கள் வெளியே பறந்து சென்று தாக்குதல் நடத்தியன.
இந்த தாக்குதல் நான்கு விமான தளங்களில் நடைபெற்றது என்றும், 41 ரஷ்ய போர் விமானங்கள் தாக்கப்பட்டன என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி மற்றும் SBU இயக்குனர் வாசில் மாலியுக் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், இந்த போரில் இதுவரை நடைபெற்ற மிகப்பெரிய உக்ரைன் ட்ரோன் தாக்குதலாக இது பார்க்கப்படும்.
SBU தனது டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்ட தகவல்படி, இந்த தாக்குதல்களால் ஏற்பட்ட மொத்த சேத மதிப்பு $7 பில்லியன் ஆகும். அதிலும் முக்கியமாக, ரஷ்யாவின் முக்கிய விமான தளங்களில் உள்ள 34% வரையிலான ஸ்டிராடஜிக் க்ரூயிஸ் மிசைல் பாம்பர் விமானங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், SBU, ரஷ்ய உளவுத்துறை FSBயின் பிராந்திய அலுவலகத்துக்கு அருகே தான் இந்தத் தாக்குதலுக்கான கட்டுப்பாட்டு மையத்தை அமைத்திருந்தது என்றும், நடவடிக்கைக்கு முந்தைய தினம், இதில் ஈடுபட்ட அனைத்து உளவாளிகளும் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.
வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யாவை, ஹாலிவுட் படங்களுக்கான திரைக்கதை போல் ஐடியா செய்து உக்ரைன் தாக்குதல் நடத்தியது உலக நாடுகள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.