11 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் ஐடி.. பசுமை புரட்சி செய்த மோடி அரசின் சாதனை..

  மத்திய வேளாண் அமைச்சகம், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து, 14 மாநிலங்களில் 6.1 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகள் வழங்கியுள்ளது. இந்த வசதி, விவசாயிகளின் நில சொத்து பதிவுகளுடன்…

farmers

 

மத்திய வேளாண் அமைச்சகம், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து, 14 மாநிலங்களில் 6.1 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகள் வழங்கியுள்ளது. இந்த வசதி, விவசாயிகளின் நில சொத்து பதிவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2026-27ம் நிதியாண்டின் முடிவில், 11 கோடி விவசாயிகளுக்கு Kisan Pehchaan Patra’ எனப்படும் தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்படும். இதில் இன்னும் கூடுதலாக விவசாய நிலங்களின் பரப்பளவு, விளையப்படும் பயிர்கள் மற்றும் பிற விவரங்கள் இடம்பெறும்.

இந்த அடையாள அட்டைகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் செயல்முறை மற்றும் பயிர் காப்பீட்டு சான்றீடுகள் விரைவாக வழங்க முடியும். பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி பணமோசடி தடுப்பு திட்டமும் இந்த ID-க்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மாநில வாரியாக டிஜிட்டல் ஐடி பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை:

உத்தரபிரதேசம் – 1.3 கோடி

மகாராஷ்டிரா – 99 லட்சம்

மத்திய பிரதேசம் – 83 லட்சம்

ஆந்திர பிரதேசம் – 45 லட்சம்

குஜராத் – 44 லட்சம்

ராஜஸ்தான் – 75 லட்சம்

தமிழ்நாடு – 30 லட்சம்

அசாம், பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, கேரளா, தெலுங்கானா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ID வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் மொத்தம் 140 மில்லியன் விவசாயிகள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 30-40% பரப்பளவுகளில் நில உரிமை இல்லாத விவசாயிகள் என்பதும், இவர்கள் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் சாகுபடி செய்கிறார்கள் என்றும் அறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் இந்த டிஜிட்டை ஐடி பெரும் பலனை கொடுக்கும்.

அதுமட்டுமின்றி PM-Kisan திட்டத்தின் கீழ், நில உரிமைப் பதிவுகளை API வழியாக சரிபார்க்கும் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. புதிய விண்ணப்பதாரர்களுக்கு, நில பதிவுகளுடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

11 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் ஐடி வழங்கியது பசுமை புரட்சி செய்த மோடி அரசின் சாதனையாக கருதப்படுகிறது.