ஒருவர் அதிகபட்சமாக எத்தனை கிரெடிட் கார்டுகள் வைத்துக்கொள்ளலாம்?

Published:

இந்தியாவில் ஒருவர் அதிகபட்சமாக எத்தனை கிரெடிட் கார்டுகள் வைத்துக் கொள்ளலாம் என்ற சந்தேகம் பலருக்கு எழுந்து உள்ள நிலையில் ஒருவர் அதிகபட்சமாக எத்தனை கிரெடிட் கார்டுகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம், இதற்கு வரையறை இல்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதே நேரத்தில் அதிக கிரெடிட் கார்டுகள் வைத்துக் கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் ஒருவரின் மாத வருமானம் மற்றும் தொழிலில் கிடைக்கும் லாபத்தை பொறுத்து வழங்குகின்றன. கிரெடிட் கார்டு பெறுவதற்கு கிரெடிட் ஸ்கோர் மிகவும் அவசியம். எதிர்பாராத விதமாக செலவுகள் வந்தால் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்து விட்டு எந்தவித வட்டியும் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் அந்த பணத்தை செலுத்தி விட்டால் கிரெடிட் கார்டு என்பது வரம்.

ஆனால் அதே நேரத்தில் கிரெடிட் கார்டை பயன்படுத்திவிட்டு சரியாக அந்த தொகையை செலுத்தாமல் இருந்தால் அபராதம் மேல் அபராதம் என்று மிகப்பெரிய சோதனையாக முடிந்து விடும்.

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் பல கிரெடிட் கார்டு வைத்துக் கொள்வது அதிக பிரச்சனையை தான் உருவாக்கும். குறிப்பாக மாத இறுதியில் அனைத்து கிரெடிட் கார்டுகளிலும் செலவு செய்த தொகையை மொத்தமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு கிரெடிட் கார்டு வாங்கும் போது ஜாயினிங் கட்டணம் இருக்கும் என்பதும் அனைத்து கிரெடிட் கார்டுகளுக்கும் வருடாந்திர கட்டணம் கட்ட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே ஒரு நல்ல நிறுவனத்தின் கிரெடிட் கார்டை வாங்கி அதில் அதிகபட்சமாக லிமிட் வைத்துக் கொண்டால் ஒருவருக்கு ஒரு கிரெடிட் கார்டு போதுமானது. ஆனால் அந்த ஒரு கிரெடிட் கார்டில் செலவழித்த தொகையை சரியான நேரத்தில் கட்ட வேண்டும் என்பதும் மினிமம் தொகையை கட்டி, அதிக வட்டி செலுத்தும் நிலையை ஏற்படுத்தினால் கிரெடிட் கார்டு என்பது ஒரு மிகப்பெரிய நரகமாக மாறிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் உங்களுக்காக...