நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பற்றிய தகவல் வெளியானது… கட்சிக் கொடி பற்றிய அப்டேட் இதோ…

Published:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் தமிழக மக்களுக்காக பல திட்டங்களையும் உதவிகளையும் செய்தவர். அதேபோல் தமிழக மக்களுக்கு பணியாற்ற எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து விஜய் தற்போது அரசியலில் இறங்கி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து, விஜய் படம் என்றாலே ஹிட் தான் என்ற நிலைமைக்கு உயர்ந்தவர் விஜய். டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வரும் விஜய் தான் உச்சபட்ச நட்சத்திரமாக இருக்கும் வேளையிலும் சினிமா வேண்டாம் என்று முடிவெடுத்து அரசியலில் நிரந்தர பணியாற்ற விரும்புகிறார் விஜய். ஏற்கனவே கமிட்டான படங்களில் நடித்துக் கொடுத்துவிட்டு முழு நேர அரசியலில் இறங்க இருக்கிறார் விஜய்.

இதில் ஆரம்ப கட்டமாக கடந்த ஆண்டிலிருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறார் நடிகர் விஜய். அடுத்ததாக இந்த வருடம் கட்சியை மேம்படுத்த எண்ணி பல மாநாடுகளையும் நடத்த திட்டமிட்டுள்ளார் விஜய்.

இப்போது விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் வருகிற செப்டம்பர் 22ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் அருகில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

மேலும் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி விஜய் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விஜயின் கட்சி கொடியில் இரண்டு வண்ணங்களுடன் நடுவில் வாகை மலர் இருக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. வாகை மலர் வெற்றி பெற்றவர்களுக்கே சூடப்படும் மலர். அந்த காலத்தில் மன்னர்கள் போர் முடித்து வெற்றியுடன் திரும்பும் போது அவர்களுக்கு வாகை மலர் சூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே மாநாடு கட்சி கொடி என இரண்டு தகவல்கள் விஜய் அவர்களின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் படியாக வெளியாகி உள்ளது.

மேலும் உங்களுக்காக...