இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் அதற்கு ஏற்றார் போல் எல்லாமே மாறிவிட்டது. குழந்தை பிறப்பது கூட மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. தெருவுக்கு தெரு கருத்தரிப்பு மருத்துவமனைகள் தான் இருக்கிறது. test tube குழந்தைகள் IVF குழந்தைகள் என பல பல வகையில் மருத்துவ சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் உலகின் முதல் முறையாக கார்பன் நியூட்ரல் குழந்தை என்ற ஒன்று இருக்கிறது. அதுவும் சென்னையில் சேர்ந்த குழந்தை தான் இந்த கார்பன் நியூட்ரல் குழந்தை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அது என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
சென்னையை சேர்ந்த தினேஷ் ஜனகநந்தினி தம்பதி தங்களது குழந்தையை உலகின் முதல் கார்பன் நியூட்ரன் குழந்தை என்று அறிவித்திருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமானது என்றால் தங்களது குழந்தை பிறந்ததற்கு பிறகு தன் வாழ்நாளில் அதன் உடம்பிலிருந்து வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடுக்கு இணையாக மரங்களை நடுவது தான் இந்த முறையாகும்.
அதாவது ஒரு சராசரி மனிதன் தனது வாழ்நாளில் கார்பன்-டை-ஆக்சைடை தனது உடம்பிலிருந்து வெளியிடும்போது அதை சமன்படுத்துவதற்காக 1000 மரக்கன்றுகளை நட வேண்டுமாம். அப்போதுதான் அந்த கார்பன் டை ஆக்சைடுக்கும் ஆக்ஸிஜனுக்கும் சமன் ஆகும். அதே போல் தினேஷ்– ஜனகநந்தினி தம்பதி தங்களது குழந்தை ஆதவி வாழ்நாளில் வெளியிடும் கார்பன்– டை-ஆக்சைடு ஆக்சிஜன் நிலைப்பாட்டை சமன் செய்வதற்கு ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் உலகின் முதல் கார்பன்யூட்ரல் பேபி என்று அந்த குழந்தை பெயர் பெற்று சாதனை படைத்திருக்கிறது.
தினேஷ்- ஜனகநந்தினி ஜோடி இந்த ஒரு விஷயத்தை மக்களுக்கு விழிப்புணர்வாக எடுத்து கூறிக்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு சராசரி தனி மனிதனும் ஆயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும் அப்போதுதான் அவர்கள் வெளியிடும் கார்பன்-டை ஆக்சைடுக்கு இணையான ஆக்சிஜன் கிடைக்கும். இதுபோல ஒவ்வொருவரும் செய்தால் புவி வெப்பமடைதல், குளோபல் வார்மிங், பேரிடர்கள் போன்றவை ஏற்படாமல் பூமி ஒரு நிலையான சமன்பாட்டுடன் இருக்கும் மக்களும் செழிப்பாக வாழலாம் என்று கூறுகிறார்கள்.