டிஜிட்டல் பேமெண்ட் பிரச்சனைகளை பற்றி இனி கவலையே இல்லை… வந்தாச்சு UPI Lite…

உலகம் தொழில் நுட்ப மயமாகிவிட்டது. அதற்கு தகுந்தார் போல் மக்களும் மாறிவிட்டார்கள். வெளியில் ஷாப்பிங் என்று சென்றால் கூட மக்கள் பணம் எடுத்துச் செல்வதில்லை. போனை எடுத்து அதில் UPI டிஜிட்டல் பேமென்ட் மூலமாக…

upi

உலகம் தொழில் நுட்ப மயமாகிவிட்டது. அதற்கு தகுந்தார் போல் மக்களும் மாறிவிட்டார்கள். வெளியில் ஷாப்பிங் என்று சென்றால் கூட மக்கள் பணம் எடுத்துச் செல்வதில்லை. போனை எடுத்து அதில் UPI டிஜிட்டல் பேமென்ட் மூலமாக தான் தணலது ஷாப்பிங் பில்லை செலுத்துகிறார்கள். ஒரு பத்து ரூபாய்க்கு பொருள் வாங்கினாலும் கூட google pay, paytm, phonepe போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை செலுத்துகிறார்கள்.

இந்த UPI என்பது ஒருவரின் குறிப்பிட்ட வங்கியில் இருந்து பணத்தை எடுத்து யாருக்கு பணத்தை செலுத்திகிறோமோ அவர்களது வங்கிக்கு கொண்டு பத்தை சேர்க்கும் முறையாகும். ஆனால் ஒரு சில நேரங்களில் நாம் ஷாப்பிங் செய்து முடித்து டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போது வங்கி சர்வர் பிசி அல்லது வேலை செய்யாவிட்டால் நம்மால் டிஜிட்டல் பேமென்ட் செய்ய முடியாது. அந்த ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு google pay அறிமுகப்படுத்தியது தான் UPI Lite அம்சம் ஆகும்.

UPI Lite என்பது வாலட் போன்றது. அதாவது நீங்கள் உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து இந்த UPI லைட்டில் 2000 ரூபாய் ரை ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ளலாம். இது உங்களது டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வங்கி சர்வரால் பிரச்சனை ஏற்படும் போது இந்த UPI Lite மூலம் உங்களால் பணம் செலுத்திக் கொள்ள முடியும்.

ஒருமுறைக்கு ரூ 2000 என ஒரு நாளைக்கு ரூ 4000 வரை இந்த UPI லைட்டை ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த UPI Lite ரீசார்ஜ் மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்க படாது. ஆனால் நீங்கள் ஒரு முறை ரீசார்ஜ் செய்து விட்டால் மீண்டும் அந்த பணத்தை வங்கி கணக்குக்கு மாற்ற இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.