முன்னணி இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஜெரெமையா ஃபௌலர் வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, Google மற்றும் Microsoft போன்ற முக்கிய மின்னஞ்சல் சேவைகளும், Facebook, Instagram, Snapchat போன்ற பிரபல சமூக ஊடகத் தளங்களும், வங்கிகள், சுகாதாரத்துறை, அரசு சேவைகள் ஆகியவற்றோடு தொடர்புடைய கணக்குகள் இதில் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கண்ட இணையதளங்கள், சமூக வலைத்தளங்களின் பாஸ்வேர்டுகள் “infostealer” எனப்படும் ஒரு வகையான மோசமான மென்பொருள் மூலம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ஃபௌலர் நம்புகிறார். இது பயனாளர்களின் சாதனங்களில் இருந்து நேரடியாக தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடியது.
இந்த வகை மென்பொருள், வலை உலாவிகளில் மற்றும் மெசேஜிங் செயலிகளில் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள், தானாக நிரப்பும் தரவுகள், குக்கீகள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க முடியும்.
Snapchat தன்னுடைய தளத்தில் எந்தவித கசிவுகளும் இல்லையென உறுதிபடுத்தி இருந்தாலும், இந்த தரவின் முழுமையான ஆதாரம் இன்னும் தெரியவில்லை.
ஹேக் செய்த தளத்தை ஹோஸ்ட் செய்த நிறுவனத்துடன் ஃபௌலர் தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அந்த தரவுத்தளம் பொதுமக்கள் அணுக முடியாத வகையில் நீக்கப்பட்டதாகவும் தெரிகிறது.. ஆனால் அந்த நிறுவனம் தரவுத்தள உரிமையாளர் விவரங்களை பகிர மறுத்ததால், இது தவறுதலாக வெளிவந்ததா அல்லது தீங்கு விளைவிக்கவே உருவாக்கப்பட்டதா என்பதும் இன்னும் தெரியவில்லை.
அந்த தரவின் உண்மை தன்மையை உறுதி செய்ய ஃபௌலர் சில மின்னஞ்சல் முகவரிகளுக்கு தொடர்பு கொண்டு, அவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்தார்.
பலர் தங்கள் மின்னஞ்சல் கணக்குகளை ஒரு இலவச கிளவுட் சேமிப்பகமாகவே பயன்படுத்துகிறார்கள். வரி ஆவணங்கள், மருத்துவ பதிவுகள், ஒப்பந்தங்கள், கடவுச்சொற்கள் போன்றவற்றை பல ஆண்டுகள் சேமித்து வைக்கிறார்கள். இது குற்றவாளிகள் அந்த கணக்குகளை கைப்பற்றினால் மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அபாயத்தை உருவாக்கும்,” என ஃபௌலர் எச்சரிக்கிறார்.
இணைய பாதுகாப்பு பார்வையில் பார்த்தால், உங்கள் மின்னஞ்சல் கணக்கில் என்னென்ன முக்கியமான தகவல்கள் உள்ளன என்பதை புரிந்து கொண்டு, பழைய, தனிப்பட்ட தகவல்கள் நிதி ஆவணங்கள் மற்றும் முக்கியமான கோப்புகளை அடிக்கடி நீக்க வேண்டும் அல்லது மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
அதிக முக்கியத்துவம் உள்ள கோப்புகளை பகிர வேண்டுமெனில், மின்னஞ்சலுக்கு பதில் ரகசியமாக்கப்பட்ட கிளவுட் சேமிப்பக சேவைகளை பயன்படுத்தலாம்” என்றும் அவர் பரிந்துரை செய்கிறார்.