தமிழ்த்திரை உலகில் எந்த பின்புலமும் இல்லாமல் போராடி தனது திறமையின் மூலம் தனக்கென தனியிடம் பிடித்தவர் அஜித்குமார். ஒரு கட்டத்தில் அவர் சினிமாவில் புகழ்பெற்றதும் தல என்றும் அல்டிமேட் என்றும் ரசிகர்கள் அவரைக் கொண்டாடினர். அந்த வகையில் அஜித் தனக்கு எந்தப் பட்டமும் வேணாம் என்று முதன்முறையாக ரசிகர்கள் மத்தியில் ஓப்பனாக பேசினார்.
தொடர்ந்து தனது படங்களிலும் கவனம் செலுத்தி ரசிகர்களைத் தக்க வைத்துக் கொண்டார். விஜய்க்குப் போட்டியாகவே இவரது படங்கள் இன்றளவும் தமிழ்த்திரை உலகில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. அவர் நடிகர் மட்டுமல்ல. கார் ரேஸரும் கூட. அதைப் பற்றி என்ன சொல்கிறார்னு பாருங்க.
அஜித்குமார் எப்படிப்பட்ட கார் ரேஸ் பிரியர் என்பது எல்லாருக்கும் தெரியும். சினிமாவை விட கார் ரேஸைத் தான் அவர் அதிகமாக விரும்புகிறார் என்ற குற்றச்சாட்டு கூட அவர் மீது உண்டு. அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. சினிமா தான் உலகம். சினிமா தான் உன் உயிர் மூச்சு என்றெல்லாம் எனக்குப் பொய் சொல்ல நான் தயாராக இல்லை.
என்னைப் பொருத்தவரைக்கும் சினிமா ஒரு தொழில். என் முதல் காதல்னா ரேஸ்தான். என் வாழ்க்கை லட்சியமே நான் ரேஸ் வீரனா ஆகணும்கறதுதான். திடீர்னுதான் சினிமாவுக்கு வந்தேன். சினிமாவுல என்னை நிலைநிறுத்திக் கொள்ள நிறைய போராட வேண்டி இருக்கு. ரேஸில் இறங்கறதுக்கு நிறைய சம்பாதிக்க வேண்டி இருக்கு.
அதற்காகத் தான் நான் ஓடிக்கொண்டே இருந்தேன். என்னைக்காவது இந்த ரேஸ்ல நான் மிகப்பெரிய வெற்றியைக் குவிப்பேன் என்று பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே தனது கருத்தை அஜித் பதிவு செய்துள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் அஜித் தெரிவித்துள்ளார்.