யூடியூபர் ஜோதி செய்திக்கு இப்படியா டைட்டில் போடுவார்கள்? பிபிசிக்கு துக்ளக் குருமூர்த்தி கண்டனம்..!

  துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் முன்னணி அரசியல் விமர்சகரான எஸ். குருமூர்த்தி. ஜோதி மல்ஹோத்ராவை “உளவு செய்பவர் என்று கைது செய்யப்பட்ட யூடியுயுபர் என குறிப்பிட்டு BBC தலைப்பு வெளியிட்டதற்கு கடுமையாக விமர்சித்துள்ளார்.…

gurumurthi

 

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் முன்னணி அரசியல் விமர்சகரான எஸ். குருமூர்த்தி. ஜோதி மல்ஹோத்ராவை “உளவு செய்பவர் என்று கைது செய்யப்பட்ட யூடியுயுபர் என குறிப்பிட்டு BBC தலைப்பு வெளியிட்டதற்கு கடுமையாக விமர்சித்துள்ளார்.

சோஷியல் மீடியா தளமான X-யில் குருமூர்த்தி இதுகுறித்து பதிவு செய்தபோது
“உளவு செய்யும் YouTuber அல்ல, YouTube-யை பயன்படுத்தி உளவு செய்யும் நபர் என்பது தான் சரியான தலைப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே பிபிசி ஊடகம் பஹல்காம் தாக்குதல் நடந்த போது தீவிரவாதிகள் என்று தலைப்பு போடுவதற்கு பதிலாக போராளிகள் என்று தலைப்பு போட்டு செய்திகளை வெளியிட்டது. அதற்கு இந்தியா தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவுக்கு எதிராகவே பிபிசி செய்திகளை அளித்து வருகிறது என்றும் இந்தியாவுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தலைப்புகளை போட்டு வருவதாகவும் விமர்சனம் எழுந்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன் பாராளுமன்றம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு மணிப்பூர் குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டு பிரச்சனையை பெரிதாக்கியது பிபிசி ஊடகம் தான் என்றும் அதன் அந்த வீடியோ தான் அந்த பாராளுமன்ற தொடரையே ஸ்தம்பிக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது..

இவ்வாறு தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிராகவே பிபிசி ஊடகம் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிபிசி ஊடகத்திற்கு இந்திய அரசியல் தரப்பில் இருந்து பல்வேறு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் தான் பிபிசி ஊடகம் இவ்வாறு செய்கிறது என்றும் நடுநிலைத் தன்மை இல்லாமல் இவ்வகையான ஊடகம் செயல்படுவது ஆபத்து என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.