பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் தீவிரமான விசாரணையை எதிர்கொண்டு வரும் யூடியூபர் ஜோதி மல்ஹோத்திராவை சுற்றியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் 150 ரூபாய்க்கு டீ கிடைக்கும் டீயை பற்றிய விலாக் ஒன்றை பார்த்த , பாஜக தலைவர் தஜிந்தர் பாக்கா வேடிக்கையான முறையில் பதிலளித்துள்ளார்.
அந்த வீடியோவில், ஜோதி பாகிஸ்தானில் ரூ.150க்கு கிடைக்கும் ஒரு வகை டீ பற்றி பேசுகிறார். அதற்கு பதிலளித்த தஜிந்தர் பாக்கா, “திகார் ஜெயிலில் இலவசமாக டீ கிடைக்கும்” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
ஜோதி மல்ஹோத்திரா டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியர் மூலமாக இந்திய இராணுவம் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு, விசாரணைக்கு உட்பட்டிருப்பதை பார்த்து அவற்றை வர்ணிக்கும் ஒரு கேலியான பதிவாகவே இதனை பார்க்கப்படுகிறது.
ஜோதி மல்ஹோத்திரா “Travel with Jo” என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்துகிறார். சமீபத்தில், அவருடைய சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், பாகிஸ்தானில் எடுத்த ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பாகிஸ்தானில் உள்ள ஒரு கடையின் அருகில் நிற்கும் ஜோதி, அங்குள்ள டீ மற்றும் சிகரெட் விலைகள் குறித்து பேசுகிறார்.
ஜோதி மல்ஹோத்திரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ரீலில், அந்த கடையாளரிடம் சிகரெட்டின் விலை எவ்வளவு எனக் கேட்கிறார். கடையாளர், “ரூ.1350” என பதிலளிக்கிறார். அது ஒரு சிகரெட் பாக்கெட் விலை ஆகும். அதாவது, பாகிஸ்தானில் ஒரு சிகரெட் பேக்கெட்டின் விலை ரூ.1350 ஆகும், இது இந்தியாவைவிட சுமார் 10 மடங்கு அதிகமாகும். இந்தியாவில் ஒரு சிகரெட் பாக்கெட்டின் விலை ரூ.110 முதல் ரூ.150 வரை இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானில் இது ரூ.1350 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் டீயும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது மிக உயர்ந்த விலையில் உள்ளது என்றும் ஜோதி மல்ஹோத்திரா அந்த வீடியோவில் கூறியுள்ளார். பாகிஸ்தானில் ஒரு கப் டீயின் விலை ரூ.150 என கூறிய அவர், இது இந்தியாவைவிட பெரிதும் அதிகம். இந்தியாவில் ஒரு கப் டீயின் விலை பொதுவாக ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே இருக்கும். ஆனால் பாகிஸ்தானில் அதே டீ ரூ.150 என, இது இந்திய விலையை விட 10 மடங்கு அதிகமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.