கட்டணங்களை உயர்த்தும் Gpay Phone pay நிறுவனங்கள்… என்ன காரணம் தெரியுமா…?

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் UPI பரிவர்த்தனைகள் தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். யாருமே பணத்தை கையில் எடுத்து செல்வதில்லை. ஒரு சிறிய கடையில் சிறிய பொருள் வாங்கினாலும் கூட மொபைல் போனிலிருந்து UPI பரிவர்த்தனையான Google…

upi

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் UPI பரிவர்த்தனைகள் தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். யாருமே பணத்தை கையில் எடுத்து செல்வதில்லை. ஒரு சிறிய கடையில் சிறிய பொருள் வாங்கினாலும் கூட மொபைல் போனிலிருந்து UPI பரிவர்த்தனையான Google Pay, Phonepe, Paytm போன்றவற்றை தான் பயன்படுத்துகிறார்கள். தற்போது இதை அதிகம் பயன்படுத்துபவர்க்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வந்திருக்கிறது. அது என்னவென்றால் இந்த Gpay Phonepe paytm ஆனது சேவை கட்டணங்களை உயர்த்த போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. என்ன காரணம் அதன் விவரங்கள் என்ன போன்றவற்றை இனி காண்போம்.

இந்த UPI பரிவர்த்தனைகளை செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை குறைப்பதாக அரசு முடிவு எடுத்து இருக்கிறது. இதன் காரணமாக இந்த Gpay Phonepe போன்ற நிறுவனங்கள் பரிவர்த்தனை கட்டணங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்க தொடங்கியுள்ளது.

G pay டெபிட் கார்டு பேமெண்ட்களில் 0.5% மற்றும் கிரெடிட் கார்டு பேமென்ட்களில் 1 சதவீதம் வரை வசூலிக்க தொடங்கியிருக்கிறது. Phonepe மற்றும் Paytm ஆகியவை மொபைல் ரீசார்ஜ் போன்ற சேவைகளில் கட்டணம் வசூலிக்க தொடங்கிவிட்டன. 2000 ரூபாய்க்கு குறைவான UPI பரிவர்த்தனைகளுக்கு, முன்னதாக அரசு மானியம் அந்தந்த நிறுவனங்களுக்கு அளித்து வந்தது. இதுவரை வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

ஆனால் தற்போது இந்த மானியத்தை அரசு நிறுத்திவிட்டால் வாடிக்கையாளர்களுக்கு தான் பிரச்சனை ஏற்படும். இந்த 2025 ஆம் ஆண்டில் இந்த மானியம் ஆனது குறைக்கப்பட்டு இருக்கிறது. இது இந்த google pay Phonepe ஆகிய நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. இதன் விளைவாக இந்த நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்க தொடங்கும். சிறிய பரிவர்த்தனைகளுக்கு தற்போது பணம் வசூலிக்கப்படவில்லை என்றாலும் போகப் போக எல்லா பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.