ஜீவா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகராவார். இவர் தந்தை ஆர்பி சௌத்ரி பிரபலமான தயாரிப்பாளர். அதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2003 ஆம் ஆண்டு ஆசை ஆசையாய் தித்திக்குதே போன்ற இரண்டு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் ஜீவா.
2005 ஆம் ஆண்டு ராம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து டிஷ்யும், அரண், ஈ, பொறி கற்றது தமிழ், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் ஜீவா.
அடுத்து பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் தனது நண்பர் ஆரியா மற்றும் சந்தனத்திற்காக கெஸ்ட் ரோலில் வந்திருப்பார். தொடர்ந்து ரௌத்திரம், நீதானே என் பொன்வசந்தம், ஜில்லா, போக்கிரி ராஜா, கோ போன்ற திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்தார் ஜீவா. 2015 காலகட்டத்திற்கு பிறகு அவருக்கு சரிவர வாய்ப்புகள் அமையவில்லை.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகர் ஜீவா தனது தந்தை ஆர்பி சௌத்ரி பற்றி பகிர்ந்திருக்கிறார். அப்போது நான் நடித்த ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி போன்ற திரைப்படங்கள் என்னுடைய அப்பாவிற்கு சுத்தமாக பிடிக்காது. அவருக்கு மிகவும் பிடித்த திரைப்படம் என்றால் அது திருப்பாச்சி தான். குடும்ப கதை கொண்ட படங்கள் மட்டுமே அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் ஜீவா.