இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா அணியினர் 264 ரன்கள் எடுத்தனர். இதனை அடுத்து, இந்தியா 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது.
இந்திய அணி, சிறப்பாக பேட்டிங் செய்து, 48.1 ஓவர்களில் 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்தியா மீண்டும் சாம்பியன்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி, அபாரமாக விளையாடி 84 ரன்கள் எடுத்தார். மேலும், அவர் ஐந்து பவுண்டரிகள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி நேரத்தில், கே.எல்.ராகுல் 42 ரன்கள் அதிரடியாக விளையாடி, இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், இறுதிப் போட்டி துபாயில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதும்.