பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்வது 100% பாதுகாப்பா? முழு அலசல்..!

Published:

இந்தியர்கள் பலவிதமான முதலீடுகளில் தங்களது சேமிப்பு பணத்தை முதலீடு செய்து வந்தாலும் பெரும்பாலான இந்தியர்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் தான் முதலீடு செய்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய தொகையை பிக்சட் டெபாசிட்டில் போட்டு வைத்து விட்டால் முழுமையான பாதுகாப்பு என்றும் வட்டி குறைவாக இருந்தால் கூட பரவாயில்லை நம்முடைய முதலீட்டிற்கு பாதுகாப்பு என்ற எண்ணத்தில் தான் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் பிக்சட் டெபாசிட் 100% முதலீடு பாதுகாப்பானதா என்றால் அது இல்லை என்று தான் பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் செபி நடத்திய சர்வேயில் இந்திய குடும்பங்களில் 95% பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்கிறார்கள் என்றும் ஆனால் இந்த டெபாசிட்டில் விலைவாசிக்கு மேல் வருமானத்தை வழங்கவில்லை என்ற விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் பிக்சட் டெபாசிட் பாதுகாப்பான முதலீடு என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் அது 100% பாதுகாப்பு இல்லை என்றும், நாம் செய்திருக்கும் பிக்சட் டெபாசிட் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை மட்டுமே பாதுகாப்பு என்றும் அதற்கு மேல் டெபாசிட் செய்வது பாதுகாப்பானது இல்லை என்றும் கூறப்படுகிறது.

பல வங்கிகள் பிக்சட் டெபாசிட் தொகையை இன்சூரன்ஸ் திட்டத்தில் காப்பீடு செய்யவில்லை என்றும் எனவே பிக்சட் டெபாசிட் 100% பாதுகாப்பானது என்று நம்புவது சரியாக இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது.

வங்கிகள், தபால் அலுவலகம், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு வட்டி குறைவான சதவீதம் கிடைக்கிறது என்பது ஒரு மைனஸ் பாயிண்ட். அது மட்டும் இன்றி முதிர்வுக்கு முன் பணம் எடுத்தால் அபராத தொகையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்வதற்கு பதிலாக பாண்டு உள்பட ஒரு சில முதலீட்டு வகையில் மாற்றினால் அதிக வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பொருளாதார ஆலோசகரிடம் முதலீடு செய்வதற்கு முன் ஆலோசிக்கவும்.

மேலும் உங்களுக்காக...