இன்று முதல் மின்சார பேருந்து இயக்கம்.. பயணிகள் மகிழ்ச்சி

By Bala Siva

Published:

இன்று முதல் பெங்களூரு – மைசூர் இடையே மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளதை அடுத்து பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க இந்தியாவில் மின்சார பேருந்துகளை அதிகம் இயக்க மத்திய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன என்பதும் முதல் கட்டமாக பெங்களூர் முதல் மைசூர் வரை மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில் இன்று முதல் பெங்களூரில் இருந்து மைசூர் வரை மின்சாரப் பேருந்து சேவை தொடக்கப்பட உள்ளது.

இந்த பேருந்தில் 43 பயணிகள் அமர்ந்து பயணம் செய்யலாம் என்பதும் பயணிகளை கவரும் வகையில் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் இருந்து மைசூருக்கு இந்த பேருந்தில் பயணம் செய்ய ரூபாய் 300 கட்டணம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த பேருந்து 320 கிலோமீட்டர் வரை இயங்கும் என்பதால் பெங்களூரில் இருந்து மைசூர் செல்லும் வரை இடையில் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.