அஜித்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்.. கிட்டத்தட்ட கன்ஃபர்ம்

By Bala Siva

Published:

அஜித் நடித்த துணிவு திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நல்ல வசூலை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் மூன்று நாட்களில் 100 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜீத் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படமான ’ஏகே 62’ படத்தின் நாயகி குறித்த தகவல் அவ்வப்போது கசிந்துள்ளது. முதலில் இந்த பக்கத்தில் நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அதன் பின்னர் த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி இந்த படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் நடிகை இருப்பதாகவும் கிட்டத்தட்ட இந்த செய்தி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தினத்தன்று ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நடிக்க இருப்பது குறித்த தகவல் உறுதி செய்யப்படும் என தெரிகிறது.

aishwarya-rai 1

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சமீபத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் அதற்கு அடுத்து அஜித்தின் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி அஜித் நடித்த ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்ற திரைப்படத்தில் ஏற்கனவே ஐஸ்வர்யாராய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...