யாராவது ஒருத்தர் செஞ்சுரி அடிச்சா பரவாயில்லை.. வர்றவங்க எல்லாம் செஞ்சுரி அடிச்சா என்ன பண்றது. நொந்து நூடுல்ஸ் ஆன இங்கிலாந்து.. 4 விக்கெட்டில் 3 பேர் செஞ்சுரி..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இதுவரை நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ள நிலையில், மூன்று வீரர்கள் சதம் அடித்துள்ளனர் என்பது இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில்…

centuries

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இதுவரை நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ள நிலையில், மூன்று வீரர்கள் சதம் அடித்துள்ளனர் என்பது இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்குகிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில், தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 159 பந்துகளில், 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 101 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், கேப்டன் ஷுப்மன் கில் 227 பந்துகளில் 147 ரன்கள் குவித்தார். இவர் 19 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடித்தார். இதை தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 177 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து, இன்னும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இவர் 10 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்களை விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ள நிலையில், மூன்று பேர் சதம் அடித்துள்ளனர் என்பதும், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு இந்தியாவிடம் சுத்தமாக எடுபடவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கருண் நாயர் களத்தில் இறங்கியுள்ளார். ரிஷப் பண்ட் மற்றும் கருண் நாயர் விளையாடி வரும் நிலையில், இந்திய அணி இதுவரை நான்கு விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் எடுத்துள்ளது. சுமார் 600 ரன்களை நெருங்கும் போது, இந்தியா அநேகமாக டிக்ளர் செய்ய வாய்ப்பு இருப்பதாக வருணனையாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த போட்டி குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர். “யாராவது ஒருத்தர் சதம் அடித்தால் பரவாயில்லை, வர்றவன் எல்லாம் செஞ்சுரி அடித்தால் இங்கிலாந்து பௌலர்கள் என்னதான் செய்வார்கள்?” என்று பதிவிட்டு வருகிறார்கள். ஏற்கனவே, இங்கிலாந்து அணியின் மோசமான பந்துவீச்சு குறித்து முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.