மோதி விளையாடு மோதி விளையாடு.. பாலைவனத்தில் பயிர் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்த விவசாயி..

  ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு விவசாயி, தரிசு பாலைவன நிலத்தை லாபகரமான பேரீச்சம்பழ தோட்டமாக மாற்றி, பலரின் எதிர்பார்ப்புகளை மீறி சாதித்து காட்டியுள்ளார். அந்த விவசாயி பெயர் ராவதாராம் கால்பி. அவர்…

dates

 

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு விவசாயி, தரிசு பாலைவன நிலத்தை லாபகரமான பேரீச்சம்பழ தோட்டமாக மாற்றி, பலரின் எதிர்பார்ப்புகளை மீறி சாதித்து காட்டியுள்ளார்.

அந்த விவசாயி பெயர் ராவதாராம் கால்பி. அவர் பார்மர் மாவட்டத்தில் உள்ள குடமலானி உட்பிரிவின் கீழ் உள்ள பகார்க்புரா கிராமத்தை சேர்ந்தவர். எட்டாம் வகுப்பு வரை படித்தவரான இவர், பேரீச்சம்பழ சாகுபடி மூலம் ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார். அவரது உறுதியும், புதுமையான சிந்தனையும் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இவர் செய்தது சாதாரண விஷயமல்ல. ஏனெனில், பலர் தங்கள் நிலங்களை தரிசாக விற்று விடும் நிலையில், கால்பி மட்டும் அதை விடாமுயற்சியுடன் மாற்றி காட்டினார். மற்றவர்கள் பாலைவன நிலத்தை பயனற்றது என்று கருதியபோது, அவர் குஜராத் சென்று பேரீச்சம்பழ சாகுபடி குறித்து தெரிந்து கொண்டார். அங்கே கண்ட தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு, தனது மாநிலத்தில் செயல்பாடுகளை தொடங்கினார்.

ஆரம்பத்தில் அவரை பலர் கேலி செய்தார்கள். ஆனால் கால்பி மட்டும் தன் முடிவில் உறுதியாக இருந்தார். மோதி விளையாடு என்ற பொன்மொழியை மனதில் கொண்டார்.அவரது உறுதி பலன் தந்தது. இன்று அவரை முன்பு கேலி செய்தவர்களே, அவரை பாராட்டி வருகின்றனர்.

கால்பியின் வருமான வளர்ச்சி: சில புள்ளிவிவரங்கள்

2015-ல் பேரீச்சம்பழ சாகுபடியை தொடங்கினார்
2018-ல் முதல் அறுவடை செய்தார், அந்த ஆண்டு ரூ. 2 லட்சம் வருமானம்
2019 – ரூ. 4 லட்சம் வருமானம்
2020 – ரூ. 5 லட்சம் வருமானம்
2021 – ரூ. 6 லட்சம் வருமானம்
2022 – ரூ. 7 லட்சம் வருமானம்
2023 – ரூ. 8 லட்சம் வருமானம்
2024 – ரூ. 10 லட்சம் வருமானம்
இந்த ஆண்டு ரூ. 12 லட்சம் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். இந்த புள்ளிவிவரங்கள் அவரது வெற்றியையும், பேரீச்சம்பழ சாகுபடி லாபகரமானது என்பதையும் தெளிவாக காட்டுகின்றன.

இன்று அவரது நிலம் முழுவதும் பசுமையான பேரீச்சம்பழ மரங்களால் நிரம்பியுள்ளது. தரிசாக இருந்த நிலம், இன்று லாபத்தை கொடுக்கும் தோட்டமாக மாறியுள்ளது. கால்பி மட்டுமல்ல, அவரது முயற்சியால் ஊக்கம் பெற்று, பார்மர் மாவட்டத்தில் தற்போது 110 விவசாயிகள் பேரீச்சம்பழ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் மெட்ஜூல் , பர்ஹி , கனமி , கூனேஜி போன்ற வகைகளை பயிரிடுகின்றனர். பார்மர் மாவட்டத்தின் தார் நகர் பகுதியில் மட்டும் 250 ஹெக்டேர் பரப்பளவில் பேரீச்சம்பழம் பயிரிடப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 10 முதல் 12 கோடி வரை வணிகம் நடைபெறுகிறது.

ராவதாராம் கால்பி, தன் உறுதியாலும், துணிச்சலாலும், பாலைவனத்தில் கூட தங்கம் விளைவிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார். இவரது சாதனை பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. மேலும் அவர் அரசின் மானியங்களையும் பெற்று இருக்கிறார்.

இவர் போன்ற விவசாயிகள் தான் நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைக்கின்றனர்