விதி வலியது.. 242 பயணிகள்.. ஒரே ஒருவர் மட்டும் தான் உயிர் பிழைத்தாரா? 10 நிமிட தாமதத்தால் உயிர் பிழைத்த பெண்..!

  அகமதாபாத்தில் இருந்து இன்று மதியம் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கிளம்பிய ஐந்து நிமிடத்திற்குள் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணம் செய்த 242 பயணிகளில் ஒருவர் கூட பிழைக்க வாய்ப்பு இல்லை என…

passenger

 

அகமதாபாத்தில் இருந்து இன்று மதியம் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கிளம்பிய ஐந்து நிமிடத்திற்குள் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணம் செய்த 242 பயணிகளில் ஒருவர் கூட பிழைக்க வாய்ப்பு இல்லை என விமான நிலைய அதிகாரிகள் கூறிய நிலையில், விதி வலியது என்ற வகையில் ஒரே ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்திருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் இருக்கை எண் 11A என்ற இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தான் உயிர் பிழைத்திருப்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் அவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விமான விபத்து நடந்த சில நிமிடங்களில் அவர் விமானத்தில் இருந்து வெளியே வந்து நடந்து செல்வதை அங்கிருந்து சிலர் பார்த்ததாகவும், படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மீட்பு படையினர் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது.

அதற்கு சில நிமிடங்களுக்குப் முன்பு தான் அகமதாபாத் நகர காவல் ஆணையர் செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கூறியிருந்தார். ஆனால், ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்திருப்பதைப் பார்க்கும்போது விதி வலியது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்பட விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலகிலேயே மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஏர் இந்தியா விமானத்தை வெறும் பத்து நிமிடங்களில் தவறவிட்ட ஒரு பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கிறார். “விமானத்தை தவறவிட்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். ஆனால், இப்போது அந்த விமானம் விபத்துக்குள்ளானது என்பதை அறிந்து என் உடல் நடுங்குகிறது. என்னால் பேசவே முடியவில்லை,” என்று அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஒரு பயணி விமானத்தில் பயணம் செய்து படுகாயங்களுடன் உயிர் தப்பியதும், இன்னொரு பயணி விமானத்தை பத்து நிமிடங்களில் தவறவிட்டதால் உயிர் பிழைத்ததும் விதியின் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.