சம்பளம், பென்ஷன் கொடுக்க பணமில்லை.. பேமெண்ட் கொடுக்க முடியலை.. திவாலில் திமுக அரசு.. ஆனால் மீடியாவோ ஸ்ரீகாந்த், கிருஷ்ணா பின்னால் போகிறது: மணி ஆவேசம்

தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக பத்திரிகையாளர் மணி யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம் மற்றும் பென்ஷன் வழங்க போதிய நிதி இல்லை என்றும், அரசுக்கு பொருட்கள்…

mani stalin

தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக பத்திரிகையாளர் மணி யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம் மற்றும் பென்ஷன் வழங்க போதிய நிதி இல்லை என்றும், அரசுக்கு பொருட்கள் சப்ளை செய்தவர்களுக்கும் பணம் கொடுக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், ஊடகங்கள் இதைப்பற்றிப் பேசாமல், “ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது செய்யப்படும் செய்தியின் பின்னால் போய்க்கொண்டு இருக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.

தமிழக அரசுக்கு எண்ணெய் சப்ளை செய்த ஒரு நிறுவனம், தங்களுக்கு 140 கோடி ரூபாய் பணம் வரவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “ஏற்கனவே பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பணம் வரவில்லை என்று போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், சப்ளை செய்த பொருட்களுக்கு கூடப் பணம் கொடுக்க முடியவில்லை என்றால், தமிழ்நாடு அரசின் நிதி எந்த நிலையில் இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளதாக பத்திரிகையாளர் மணி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு நிதி அவசரநிலையை (Financial Emergency) சந்தித்துள்ளதா என்றும் நீதிபதி கேட்டுள்ளது மிகவும் முக்கியமான கேள்வி என்றும், இதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல், தமிழக அரசின் நிதி நிலைமையை வெளிக்காட்டுவதாக உள்ளது என்றும் மணி கூறியுள்ளார்.

ஏற்கனவே, போக்குவரத்துக் கழகங்களில் உள்ள ஓய்வுபெற்றவர்களுக்கு 22 மாதங்களாக ஓய்வூதியப் பலன்கள் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் தமிழக அரசு மீது உள்ளது.

பள்ளிகளில் மதிய உணவு திட்டம், மருத்துவக் காப்பீடு இலவசம் போன்ற சமூக பாதுகாப்புத் திட்டங்கள் அவசியமானவைதான் என்று கூறிய மணி, ஆனால் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதால் என்ன பலன் ஏற்படப் போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஒரு கோடி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என்றால், மாதம் ஆயிரம் கோடி ரூபாய் தேவையில்லாமல் செலவாகிறது. அந்த பணத்தை வைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் பென்ஷன் அளிக்கலாம், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாம், இன்னும் பல செலவுகளை செய்யலாம். அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் இந்த பணம் வீணாக செலவாகிகொண்டிருக்கிறது,” என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

“எந்த அரசாங்கம் அமைந்தாலும், 2026-ல் பதவி ஏற்கும் அரசு மிகவும் கொடூரமான அரசாக இருக்கும். தமிழ்நாட்டின் கடன் அதிகரித்துள்ள நிலையில், மிக அதிகமாக வரி உயர்வு இருக்கும். மக்களிடம் இருந்து அதிகபட்ச தொகையை வரியாகப் பெறுவார்கள்,” என்றும் அவர் பயமுறுத்தி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. “வாழ தகுதி இல்லாத அளவுக்கு தமிழக மக்கள் மாறுவார்கள்,” என்றும் அவர் கூறியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

1000 ரூபாய் இலவசம் என்பது தமிழ்நாட்டில் ஆரம்பித்து தற்போது இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “என்னை பொறுத்தவரை, உலகத்திலேயே மிகவும் மோசமான திட்டம் என்றால் மாதம் 1000 ரூபாய் திட்டம்தான். இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது. இதை நிறுத்தினால் தான் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும்,” என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.