ஆடியோ, வீடியோ கால்.. End-to-end encryption.. AI ஸ்மார்ட் ரிப்ளை.. அறிமுகம் ஆகிறது XChat.. வாட்ஸ் அப்-க்கு மாற்றா?

  உலகின் முன்னணி தொழில் அதிபரான எலான் மஸ்க், எக்ஸ் என்ற சமூக வலைதளத்தை நடத்தி வரும் நிலையில் அதில் தற்போது மேலும் சில வசதிகளை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பாக XChat என்பது…

XChat

 

உலகின் முன்னணி தொழில் அதிபரான எலான் மஸ்க், எக்ஸ் என்ற சமூக வலைதளத்தை நடத்தி வரும் நிலையில் அதில் தற்போது மேலும் சில வசதிகளை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பாக XChat என்பது அறிமுகம் செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளார். இது வாட்ஸ் அப்-க்கு இணையாக, மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

XChat என்பது என்ன? என்பது குறித்து எலான் மஸ்க் தனது X பக்கத்தில் கூறியதாவது:
“புதிய XChat என்பது டெக்ஸ்ட் மெசேஜ்கள், ஃபைல் அனுப்பும் வசதி,  ஆடியோ/வீடியோ அழைப்புகளுடன் வெளிவருகிறது.” என்று தெரிவித்துள்ளார். மேலும் பிட்காயின் வாலட் வசதியும் உண்டு என கூறியுள்ளார்.

XChat இன் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

டெக்ஸ்ட், ஆடியோ,  வீடியோ மெசேஜிங் மற்றும் கால் வசதி

End-to-end encryption

கிரிப்டோ வாலெட்

AI அடிப்படையிலான ஸ்மார்ட் ரிப்ளை

மேலும் Grok AI என்பது தற்போது ஒரு பர்சனல் அசிஸ்டெண்ட் போல செயல்படுகிறது என்றும், பயனாளர்கள் டிக்கெட் பதிவு செய்யவோ, ஒரு சந்திப்பை திட்டமிடவோ,  ஆவண வடிவமைக்கவோ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் WeChat என்பது பயனர்களுக்கு தேவையான அனைத்து ஆன்லைன் வசதிகளையும் ஒரே செயலியில் இருப்பது போல எலான் மஸ்க்,  XChat மூலம் ஒரு சூப்பர் ஆப்பை உருவாக்கும் முயற்சியின் ஒரு முக்கிய படியாக அமைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தகவல் பரிமாற்றம், சமூக ஊடகம், டிக்கெட் பதிவு, வங்கி சேவைகள், வீடியோ கால் ஆகியவற்றை X என்ற ஒரே செயலியில் ஒருங்கிணைக்கும் முயற்சியை எலான் மஸ்க் எடுத்து வருவதாக தெரிகிறது.

எலான் மஸ்க் உருவாக்கும் சூப்பர் ஆப், உலகளவில் 2.8 பில்லியன் பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப்-க்கு இணையாக அல்லது மாற்றாக மாறுமா? குறிப்பாக இந்தியாவில் இது பிரபலமாகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.