விமான நிலையத்தில் முதியவருக்கு மாரடைப்பு.. பெண் டாக்டர் செய்த மேஜிக்கால் உயிர் பிழைத்த அதிசயம்..!

Published:

டெல்லி விமான நிலையத்தில் திடீரென முதியவர் ஒருவர் மாரடைப்பால் மயங்கி விழுந்த நிலையில் அருகில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் ஐந்து நிமிடம் போராடி அவரது உயிரை திரும்ப வரவழைத்த அதிசயம் குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எப்போதும் பரபரப்பாக இருக்கும் டெல்லி விமான நிலையத்தில் முதியவர் ஒருவர் விமானத்திற்கு காத்திருந்த நிலையில் திடீரென அவரது மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மயங்கி விழுந்த நிலையில் அவருடைய மனைவி என்ன செய்வது என்று தெரியாமல் உதவிக்காக கதறினார்.

அப்போது அந்த பகுதி வழியாக வந்த டாக்டர் பிரியா என்பவர் உடனடியாக அந்த முதியவரை படுக்க வைத்து அவரது நெஞ்சின் மீது கையை வைத்து அழுத்தினார். அவரிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தாலும் மனதை தளர விடாத டாக்டர் பிரியா, தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்கள் அவரது நெஞ்சில் அழுத்தி கொண்டிருந்தார்.

அதன் பின் அவருக்கு லேசாக மூச்சு திரும்பிய நிலையில் திரும்பவும் அவர் நெஞ்சை அழுத்தி உயிர் பிழைக்க வைத்தார். இதனையடுத்து உடனடியாக அவர் முதலுதவி சிகிச்சைக்காக விமான நிலையம் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த வீடியோ பயணி ஒருவரால் எடுக்கப்பட்டு தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் உங்களுக்காக...