இதனால தான் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல… அப்புக்குட்டி உருக்கம்…

Published:

தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்தவர் அப்புக்குட்டி. இவரின் இயற்பெயர் சிவபாலன் என்பதாகும். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் 1994 ஆம் ஆண்டு சென்னைக்கு குடிபெயர்ந்தார் அப்புக்குட்டி. ஆரம்பத்தில் பிழைப்பிற்காக சிறு சிறு ஹோட்டல்களில் பணிபுரிந்தார்.

நெடுநாட்களாக சினிமாவில் வாய்ப்புத் தேடி கொண்டிருந்த அப்புக்குட்டி திரையுலக பிரமுகர்களால் கவனிக்கப்பட்டு, அதனால் வாய்ப்புக் கிடைத்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் அப்புக்குட்டி. 1998 ஆம் ஆண்டு ‘மறுமலர்ச்சி’ திரைப்படத்தில் தேநீர் விற்பவராக தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார் அப்புக்குட்டி.

‘சொல்ல மறந்த கதை’, ‘கில்லி’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘தீபாவளி’, ‘ராமன் தேடிய சீதை’ போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் அப்புக்குட்டி. பின்னர் ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட அப்புக்குட்டி என்ற பெயரையே தனது திரையுலக பெயராக மாற்றிக்கொண்டார் அப்புக்குட்டி.

பின்னர் ‘குள்ளநரி கூட்டம்’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘சுந்தரபாண்டியன்’, ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘வெந்து தணிந்தது காடு’ போன்ற திரைப்படங்களில் மூலம் பிரபலமானார் அப்புக்குட்டி. ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார் அப்புக்குட்டி.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட அப்புக்குட்டி, தனக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதைப் பற்றி பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியது என்னவென்றால், நான் சிறிய வயதில் இருக்கும்போதே அப்பா அம்மா இறந்துட்டாங்க. பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வைக்க ஆள் இல்லை. பொண்ணு தேடிட்டு இருக்கேன். சினிமாக்காரன் என்று சொன்னாலே சொந்தக்காரங்க கூட பொண்ணு தர யோசிக்கிறாங்க என்று உருக்கமாக பேசியுள்ளார் அப்புக்குட்டி.

மேலும் உங்களுக்காக...