திமுகவுக்கு தோல்வி பயம்.. உள்ளே பாமக, தேமுதிக.. திருமாவுக்கு செக்.. மதிமுக, கம்யூனிஸ்டுகள் மேல் சந்தேகம்.. என்ன நடக்குது திமுக கூட்டணியில்?

தி.மு.க.வுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுவிட்டதாகவும், தி.மு.க. ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அதை சரிக்கட்ட கூடுதல் கட்சிகளை இணைக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாகவும், அதனால்தான் தே.மு.தி.க. மற்றும் பா.ம.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பத்திரிகையாளர்…

dmk

தி.மு.க.வுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுவிட்டதாகவும், தி.மு.க. ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அதை சரிக்கட்ட கூடுதல் கட்சிகளை இணைக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாகவும், அதனால்தான் தே.மு.தி.க. மற்றும் பா.ம.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பத்திரிகையாளர் மணி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, “தயவுசெய்து எங்கள் கூட்டணிக்கு வேறு கட்சிகள் வரவேண்டாம்” என்று சொன்ன கட்சிதான் தி.மு.க. ஏனென்றால், அங்கு ஒரு பெரிய கூட்டமே இருப்பதால், அதற்கு மேல் அந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடமில்லை என்றுதான் கூறப்பட்டது. 2021 தேர்தலின்போதே, தே.மு.தி.க, திமுக கூட்டணியில் நுழைய முயற்சித்தபோது, அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ள நிலையில், தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணிக்குள் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும், கிட்டத்தட்ட தே.மு.தி.க. கூட்டணியில் இணைவது உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அதே நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்தால், அதில் ராமதாஸ் பா.ம.க, தி.மு.க. கூட்டணிக்கு வரும் என்றும், அன்புமணி தான் மதவாதி, ராமதாஸ் மதச்சார்பற்றவர் என்ற பிரச்சாரம் பரப்பப்படும் என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்தார். மேலும், ராமதாஸ் வந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறாது என்றும், அப்படியே வெளியேறினாலும், அந்தக் கட்சி எந்த கூட்டணியிலும் செல்ல முடியாத நிலைதான் தற்போது உள்ளதால், திருமாவளவன் வெளியேற மாட்டார் என்றும் தி.மு.க. நம்பிக்கையுடன் இருப்பதாக மணி தெரிவித்தார்.

ஆனால், அதே நேரத்தில் அ.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது சந்தேகம் இருப்பதாகவும், மேற்கண்ட கூட்டணி கட்சிகளுக்கு செக் வைப்பதற்காகவே பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த தி.மு.க. ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் தி.மு.க. தோல்வி பயத்தில் இருப்பதாகவும், இரண்டு கட்சிகளை மேலும் கூட்டணியில் சேர்த்தால் கூட அந்தக் கட்சி கரையேறுமா என்பது சந்தேகம் தான் என்றும், அப்படியே ஜெயித்தாலும் கூட்டணி ஆட்சி அமைக்கும் வகையில் தான் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.