கேங்ஸ்டர் கும்பல் தலைவன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. எதிர்பாராமல் இறந்த மனைவி.. கள்ளக்காதலனை கொலை செய்ய வெறியுடன் அலையும் 40 பேர்..

நாக்பூரில் உள்ள ஒரு கேங்ஸ்டர் கும்பலை சேர்ந்த தலைவனின் மனைவியுடன், அதே கும்பலை சேர்ந்த ஒருவன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த நிலையில், தலைவனின் மனைவி எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தார். ஆனால், கள்ளக்காதலன் தான் தனது…

gangser

நாக்பூரில் உள்ள ஒரு கேங்ஸ்டர் கும்பலை சேர்ந்த தலைவனின் மனைவியுடன், அதே கும்பலை சேர்ந்த ஒருவன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த நிலையில், தலைவனின் மனைவி எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தார். ஆனால், கள்ளக்காதலன் தான் தனது மனைவியை கொன்றுவிட்டான் என்ற ஆத்திரத்தில் கேங்ஸ்டர் தலைவன் இருக்க, கள்ளக்காதலனை பிடித்து கொலை செய்ய வேண்டும் என்ற வெறியுடன் அவனது கூட்டாளிகள் 40 பேர் தேடி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், ஒரு கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்த தலைவனின் மனைவியுடன், அதே கும்பலை சேர்ந்த டோபி என்பவர் கள்ளக்காதலில் இருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் தலைவனின் மனைவி உயிரிழந்துவிட்டார்.

இந்த நிலையில், தனது மனைவியைத் தனது ஆசை நாயகியாக மாற்றிய டோபியை கொலை செய்ய, அந்த கும்பலைச் சேர்ந்த 40 பேர் நகரம் முழுவதும் தேடி வருவதாகவும், கொலை வெறியுடன் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், டோபிதான் அந்தப் பெண்ணை கொன்றுவிட்டான் என்றும், விபத்து என்பது ஒரு நாடகம் என்றும் தலைவன் மற்றும் அவனது கும்பல் நம்புவதால், கொலை வெறியுடன் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால், உண்மையில் சிசிடிவி காட்சிகளின்படி, தலைவனின் மனைவி கள்ளக்காதலனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஜேசிபி வாகனம் ஒன்று மோதியதால் விபத்து ஏற்பட்டதாகவும், அந்த பெண் பலத்த காயமடைந்த நிலையில் டோபிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது. இதனையடுத்து, படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் இருந்த அந்த பெண்ணைக் காப்பாற்ற டோபி முயன்றதாகவும், ஆனால் இரண்டு மருத்துவமனைகள் அந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்க மறுத்துவிட்டதை அடுத்து, மூன்றாவது நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் உதவியுடன் சேர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் அந்த பெண் உயிரோடு இருப்பதும், அவர் அருகே டோபி இருப்பதும் பதிவாகியுள்ளது. ஆனால், சிகிச்சையின் பலனின்றி சில மணி நேரங்களிலேயே அந்த பெண் இறந்ததை அடுத்து, அந்த கும்பல் தலைவன் கடும் கோபத்தில் உள்ளார்.

டோபியைத் துரோகி என அறிவித்து, அவனை கொல்வதாக சபதம் செய்துள்ளதாகவும், அந்த கும்பலைச் சேர்ந்த 40 பேர் பயங்கர ஆயுதங்களுடன் டோபியை தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்த டோபி காவல் நிலையத்தில் சென்று இது குறித்து கூறியபோது, அங்கு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும், காவல்துறையினரும் டோபிக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்த நிலையில், காவல்துறையையும் நம்பாமல், டோபி தன்னை காப்பாற்றிக்கொள்ள தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது.

சினிமா போல் இருக்கும் இந்த சம்பவம் நாக்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.