திமுக எடுத்த 3 சர்வே.. 56 தொகுதிகளில் மட்டுமே வெற்றி.. துரைமுருகனுக்கு தோல்வி சென்னையிலேயே 3 தொகுதிகளில் தோல்வி.. அரசியல் விமர்சகர் தேவப்பிரியா

  2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் இப்போதே அரசியல் கட்சிகளால் தொடங்கப்பட்டுவிட்டன. கூட்டணி பேச்சுவார்த்தைகளும் சூடு பிடித்துள்ளன. இந்த நிலையில், ஆளும் கட்சியான தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்தே…

Government announcement that 75,000 youth will be employed in government jobs as announced by Stalin

 

2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் இப்போதே அரசியல் கட்சிகளால் தொடங்கப்பட்டுவிட்டன. கூட்டணி பேச்சுவார்த்தைகளும் சூடு பிடித்துள்ளன. இந்த நிலையில், ஆளும் கட்சியான தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்காக எத்தனை கோடி ரூபாய் செலவழிக்கவும் அந்த கட்சி தயாராக இருப்பதாக ஒரு வதந்தி வேகமாக பரவி வருகிறது.

தி.மு.க. தற்போது நான்கு முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனங்களை கைவசம் வைத்திருப்பதாகவும், ஒவ்வொரு மாதமும் அந்த நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கருத்துக்கணிப்புகளை எடுத்து, கட்சித் தலைமைக்கு அறிக்கை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை எடுக்கப்பட்ட மூன்று கருத்துக்கணிப்புகளில், தி.மு.க. 50 முதல் 60 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும், சரியாக சொல்ல வேண்டுமானால் 56 தொகுதிகள் மட்டுமே பாசிட்டிவாக இருப்பதாகவும் அந்தக் கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக அரசியல் விமர்சகர் தேவப்பிரியா ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தி.மு.க.வுக்கும், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தி.மு.க.வின் வாக்குகளை நடிகர் விஜய் பெரும் அளவில் பிரிக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், இந்த கருத்துக்கணிப்பு முடிவும் வெளிவந்துள்ளதால் தி.மு.க. தலைமை அதிர்ச்சியில் இருப்பதாகத் தெரிகிறது.

இதுமட்டுமின்றி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கூட்டணியிலிருந்து விலகினால் அதற்கு பதிலாக 25 தொகுதிகள் வரை கொடுத்து பா.ம.க.வை தி.மு.க. தனது கூட்டணியில் இணைத்து கொள்ளும் என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும், கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்களில் 80 சதவீதம் பேருக்கு 2026 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்றும், குறிப்பாக 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு கிடையாது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி பார்த்தால், துரைமுருகன் உட்பட பல சீனியர்களுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, காட்பாடி தொகுதியில் துரைமுருகன் தோல்வியடைவார் என்று கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் அறிக்கை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பல முக்கிய அமைச்சர்களும் மிகவும் கஷ்டப்பட்டுதான் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை திமுகவின் கோட்டை என்று கூறப்படும் நிலையில் சென்னையில் உள்ள பல தொகுதிகள் திமுகவுக்கு சாதகமாக இருந்தாலும் மூன்று தொகுதிகள் அதாவது வேளச்சேரி, மயிலாப்பூர், தியாகராய நகர் ஆகிய தொகுதிகள் கண்டிப்பாக திமுகவுக்கு தோல்வியை கொடுக்கும் என்றும் தேவப்பிரியா தெரிவித்துள்ளார்

மொத்தத்தில், இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகளை வைத்து தி.மு.க. தனது தேர்தல் திட்டங்களை மாற்றி அமைத்து, எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிரடியான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.