இந்த ஏரியா அந்த ஏரியா ஆல் ஏரியாலையும் ஐயா கில்லி டா.. திமுகவின் ஸ்லீப்பர் செல்கள் சிவலோகத்தில் கூட இருப்பார்கள்: துக்ளக் ரவி

  திமுகவின் ஸ்லீப்பர் செல்கள் சிவலோகத்தில் கூட இருப்பார்கள் என்றும், அவர்களுடைய ஸ்லீப்பர் செல்கள் இல்லாத இடமே இல்லை என்றும், துக்ளக் வாசகர் ரவி என்பவர் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ravi

 

திமுகவின் ஸ்லீப்பர் செல்கள் சிவலோகத்தில் கூட இருப்பார்கள் என்றும், அவர்களுடைய ஸ்லீப்பர் செல்கள் இல்லாத இடமே இல்லை என்றும், துக்ளக் வாசகர் ரவி என்பவர் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணம் திமுகவின் ஸ்லீப்பர் செல்கள் தான் என்றும், கட்சியில் உள்ள ஸ்லீப்பர் செல்கள் இந்தப்பிரச்சனையை வளர்த்து பாமகவை அழிக்க நினைக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

“திமுகவின் ஸ்லீப்பர் செல்கள் சிவலோகத்தில் கூட இருப்பார்கள். அங்கும் சிவன் – பார்வதி இடையே பிரச்சனையை உருவாக்குவார்கள்; முருகனிடம் பிரச்சனையை உருவாக்குவார்கள்; விநாயகரிடம் பழத்தை கொடுப்பார்கள். நாரதர் நன்மைக்காக செய்த விஷயங்களை திமுக கெடுதலுக்காக செய்யும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

“திமுகவின் ஸ்லீப்பர் செல்கள் ரிசர்வ் வங்கியில் இருப்பார்கள், ராணுவத்தில் இருப்பார்கள், அனைத்து கட்சிகளிலும் இருப்பார்கள், பொதுமக்கள் மத்தியிலும் இருப்பார்கள். இந்தக் கேவலமான வேலையை திமுக பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது. ஸ்லீப்பர் செல்கள் கிடைக்கவில்லை என்றால், அந்தந்த துறையில் இருப்பவர்களை விலைக்கு வாங்கி விடுவார்கள். ஆனால், அதே நேரத்தில், கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான் என்ற வகையில், ஸ்லீப்பர் செல் உடையவன் ஸ்லீப்பர் செல் மூலமாகவே அழிந்துவிடுவான்,” என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது அதிமுக – பாஜக கூட்டணியுடன் மதிமுக பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன தவறு என்றும், ஏற்கனவே வாஜ்பாய் இருக்கும்போது பாஜக கூட்டணியில் வைகோ இருந்தவர் தான் என்றும், திமுக கூட்டணியில் கொத்தடிமையாக இருக்க வேண்டிய அவசியம் எந்தக் கட்சிக்கும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“இப்போதைய மக்களின் மனநிலை திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் என்றும், அதனால் திமுகவுக்கு எதிராக ஒரு வளமான அணி அமைய வேண்டும்,” என்றும் அவர் கூறினார். “இலங்கையை காப்பாற்றுங்கள், தமிழக மீனவர்களைக் காப்பாற்றுங்கள் என்று முதல்வர் கடிதம் எழுதுவார். ஆனால், தனக்கு ஒரு வேலை ஆக வேண்டும் என்றால் மட்டும், உடனே நேரில் சென்று அந்த வேலையை முடித்து கொள்வார்,” என்றும் அவர் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தார்.