நீங்கள் விளம்பரங்களிலும், சமூக வலைத்தள ரீல்களிலும் AI-யால் உருவாக்கப்பட்ட மாடல்களை பார்த்திருக்கலாம். ஆனால், நீங்களே சொந்தமான ஒரு AI மாடலை எப்படி உருவாக்குவது குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
AI மற்றும் CGI (கணினி வரைகலை) மற்றும் குரல் எடிட்டிங் திறன்களுடன் இயங்கும் ஒரு டிஜிட்டல் ஆளுமையே ஒரு AI இன்ஸ்டாகிராம் மாடல் ஆகும். இவை மனிதர்களின் ஈடுபாடு இல்லாமல், புகைப்படங்களை பதிவிடவும், மற்றவர்களுடன் உரையாடவும், பிராண்டுகளை பிரதிநிதித்துவப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதை உருவாக்க கோட் எழுத தேவையில்லை. அதேபோல் ஓப்பன் சோர்ஸ் AI போன்ற சரியான கருவிகளை கொண்டு, யார் வேண்டுமானாலும் தங்களுக்குரிய விர்ச்சுவல் மாடல்களை உருவாக்க முடியும். அப்படி ஒரு AI இன்ஸ்டாகிராம் மாடலை எப்படி உருவாக்குவது என்பதை பார்ப்போம்.
முதலில் உங்கள் மாடல்லின் குணாதிசயங்களையும், பாணியையும் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் உருவாக்கும் மாடல் ஒரு ஃபேஷனிஸ்டாவா, தொழில்நுட்ப வல்லுநரா அல்லது ஆரோக்கிய பயிற்சியாளரா? அவர்களின் காட்சி அம்சங்களான வயது, இனம், தலைமுடி மற்றும் உடை பாணியை தேர்ந்தெடுக்க வேண்டும். இறுதியாக, அவர்களின் ஆளுமை, ஆர்வங்கள் மற்றும் பயணம் அல்லது செல்லப்பிராணிகள் போன்ற துணை பிரிவுகளை சேர்த்து ஒரு பின்னணி கதையை உருவாக்கவும். இந்த ஆரம்பகட்ட வடிவமைப்பு, உங்கள் AI மாடலின் உருவாக்கம் மற்றும் குரலுக்கு வழிகாட்டும்.
அடுத்ததாக மாடல்களை உரை அல்லது படங்களின் அடிப்படையில் உருவாக்கும் பல்வேறு தளங்கள் இப்போது கிடைக்கின்றன. SDXL Turbo / Juggernaut XL போன்றவை மூலம் இலவசமாக யதார்த்தமான முகங்களை உருவாக்கலாம். Genfluence,RenderNet போன்ற தளங்கள் “பேஸ்-லாக்” மற்றும் போஸ்களை உருவாக்க உதவுகிறது.
மூன்றாவதாக ஒரு நம்பகமான விர்ச்சுவல் மாடலை உருவாக்க LoRa பயன்படுத்தலாம்… மேலும், யதார்த்தமான தோல் அமைப்பு மற்றும் நிலையான முகத்தை கொண்டுவர, upscaling மற்றும் faceswap தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
நான்காவதாக ஒரு மாடல் உண்மையான மனித உருவத்தில் தோன்ற வேண்டும். இதற்கு நிலையான புகைப்படங்களை பயன்படுத்த வேண்டும். மாடலின் வடிவம், பெயர், செயல், பின்னணி போன்ற பிராப்ம்ட்களை கொடுத்து படங்களை உருவாக்கலாம். காட்சி தொடர்ச்சிக்கு, ஒரே முக அமைப்பைப் பயன்படுத்துவது அவசியம். வீடியோ மற்றும் குரலுக்கு, Kling AI மற்றும் Runway போன்ற ‘நோ-கோட்’ போன்றவற்றை பயன்படுத்தலாம். ElevenLabs போன்ற AI கருவிகளை பயன்படுத்தி உங்கள் ஸ்கிரிப்டை உள்ளிட்டு, காட்சி படங்களுடன் குரலை இணைக்கலாம்.
ஐந்தாவதாக உங்களிடம் உள்ளடக்கம் தயாரானதும், உங்கள் இன்ஸ்டாகிராம் இருப்பை உருவாக்கலாம். முதலில் உங்கள் மாடல் பெயருடன் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கவும். பிறகு, அவர்கள் AI-யால் இயங்குகிறார்கள் என்பதை பயோவில் குறிப்பிடவும். தொடக்கத்தில் 20-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி, அதற்கான தலைப்புகள், ஹேஷ்டேக்குகள் மற்றும் உள்ளடக்க வரிசையை சேர்க்கவும். பயனர்களை கவர விளம்பரங்கள் அல்லது வாக்கெடுப்புகள் தனிப்பட்ட செய்திகள் போன்றவைகளை பயன்படுத்தலாம். தினமும் ஸ்டேட்டஸ் பதிவு செய்வதன் மூலம் ஒரு மாதத்திற்குள் 1,000-க்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை பெறலாம். .
கடைசியாக உங்கள் விர்ச்சுவல் மாடல் புகழ் பெறத் தொடங்கியதும், அதை monetize செய்து சந்தைப்படுத்தல் , விளம்பரங்கள் மற்றும் பிராண்டு கூட்டாண்மைகள், உறுப்பினர்களுக்கான ஆகியவற்றை பெறலாம். YouTube, TikTok போன்ற பிற தளங்களுக்கு விரிவாக்குதல் கூடுதல் வருவாயை தரும். ஒரு படைப்பாளி, நிலையான பதிவுகளை வெளியிட்ட பிறகு விளம்பரங்கள் மூலம் ஒரு பெரும் தொகையை வருவாயாக கொள்ளலாம்.
இந்த டிஜிட்டல் மாடல்களில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்று FTC வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. எனவே, நீங்கள் உருவாக்கும் AI மாடல், அது ஒரு டிஜிட்டல் மாடல் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்பது இதில் முக்கியமானது.