3 நொடி கிளிப்புக்கே 10 கோடி கேட்டவர் தானே தனுஷ்.. வெற்றிமாறனிடம் 20 கோடி கேட்க மாட்டாரா? தனுஷை தியாகி ஆக்க முயற்சி.. சிம்பு ரசிகர்கள் கொதிப்பு..!

  நயன்தாராவின் திருமண வீடியோவில், ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட மூன்று வினாடி கிளிப்பிங்கை பயன்படுத்த 10 கோடி ரூபாய் கேட்டு தனுஷ் வழக்கு தொடுத்தவர் தானே? அப்படி இருக்கும்போது, தன்னுடைய வடசென்னை…

vetrimaran

 

நயன்தாராவின் திருமண வீடியோவில், ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட மூன்று வினாடி கிளிப்பிங்கை பயன்படுத்த 10 கோடி ரூபாய் கேட்டு தனுஷ் வழக்கு தொடுத்தவர் தானே? அப்படி இருக்கும்போது, தன்னுடைய வடசென்னை படத்திலுள்ள முக்கிய கதாபாத்திரங்களையும், கதையின் சாராம்சத்தையும் பயன்படுத்த வெற்றிமாறன் திட்டமிட்டபோது, தனுஷ் 20 கோடி ரூபாய் கேட்டிருக்க மாட்டாரா? கண்டிப்பாக அவர் கேட்டிருப்பார்.

ஆனால், தனுஷை நல்லவராக காட்ட, சில கூலிக்கு மாரடிக்கும் யூடியூபர்களும், சில திரையுலகினர்களும் பொய்யான கதைகளை சொல்லி தனுஷை ‘தியாகி’யாக்க முயற்சிக்கிறார்கள் என சிம்பு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில், ‘வடசென்னை’ படத்தின் சில கதாபாத்திரங்களையும், சில காட்சிகளையும் பயன்படுத்த வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக தனுஷிடம் அனுமதி கேட்க சென்றபோது அவர் 20 கோடி ரூபாய் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

உண்மையிலேயே தனுஷ் 20 கோடி ரூபாய் கேட்டிருந்தால், அதில் தவறு ஏதுமில்லை. ஏனெனில், ‘வடசென்னை’ படத்தின் தயாரிப்பாளர் அவர்தான் என்பதால், அவருக்கு பணம் கேட்பதற்கு முழு உரிமை உண்டு. தனுஷ் பணம் கேட்டார், அதை கொடுத்துவிட்டோம் என்று வெற்றிமாறன் கூறியிருந்தால் கூட இந்தப் பிரச்சனை சுமூகமாக முடிந்திருக்கும். ஆனால், தனுஷை ‘தியாகி’யாக்குவதற்காக வெற்றிமாறன் வெளியிட்ட வீடியோதான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

“தனுஷ் நல்லவர், வல்லவர், தியாக மனம் படைத்தவர், அவர் ஒரு பைசா கூட வாங்கவில்லை” என்று வெற்றிமாறன் வெளியிட்ட வீடியோவுக்குத்தான் தற்போது சிம்பு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

நயன்தாரா திருமண வீடியோவில், ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஷூட்டிங்கின் போது எடுத்த மூன்று நொடி கிளிப்பிங்ஸ்க்கு 10 கோடி கேட்டவர் தானே தனுஷ்? அப்படி இருக்கும்போது தனது படத்தின் காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் பயன்படுத்துவதற்குப் பணம் கேட்காமல் எப்படி இருப்பார்? கண்டிப்பாக அவர் கேட்டிருப்பார். வெற்றிமாறனும் தயாரிப்பாளரிடம் சொல்லி கொடுக்க சொல்லியிருப்பார்.

ஆனால், தனுஷை தியாகியாக்க வேண்டும் என்பதற்காகவே வெற்றிமாறன் வீடியோவை வெளியிட்டுள்ளார். நிச்சயமாக தனுஷ் கேட்ட பணத்தை வெற்றிமாறன் கொடுத்திருப்பார். ஆனால், தனுஷ் பணம் கேட்கவே இல்லை என்று அவரை நல்லவராக்க முயற்சி நடந்து வருகிறது,” என்று சிம்பு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மையில், தனுஷ் பணம் வாங்கினாரா, வாங்கவில்லையா என்பது அவரது மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். அப்படியே அவர் பணம் வாங்கியிருந்தாலும் அது தவறில்லை. அவர் தனது உரிமையைத்தான் கேட்டு வாங்குகிறார். அவ்வாறு இருக்கும்போது, இது ஒரு பெரிய பிரச்சனையாக சமூக வலைத்தளத்தில் இரு தரப்பினர் மோதிக்கொள்வது தேவையில்லாதது என நடுநிலை சினிமா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சிம்புவும் தனுஷும், வெற்றிமாறனும் தனுஷும் நட்புடன் தான் இருக்கிறார்கள். ஆனால், நட்பு வேறு; வியாபாரம் வேறு. எனவே, வியாபாரம் சம்பந்தமாக கண்டிப்பாக பணம் கைமாறியிருக்கும். அப்படி கைமாறியிருந்தாலும் அது தவறல்ல; சரியான நடைமுறைதான். அப்படி இருக்கும்போது தேவையில்லாமல் ரசிகர்கள் ஏன் மோதிக்கொள்ள வேண்டும் என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.