மனைவி சொல்லே மந்திரம்.. மனைவியை தொழில் பார்ட்னராக இணைத்து கொண்டால் சக்சஸ் தான்.. 17 பில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரர் பேட்டி..!

  கலிபோர்னியாவில் உள்ள பிரபல கிளவுட் பாதுகாப்பு நிறுவனமான Zscaler-ன் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெய் சௌத்ரி, உலகப் புகழ்பெற்ற சைபர் பாதுகாப்பு ஜாம்பவான் என்பது பலர் அறிந்ததே. 66 வயதாகும் அவர், ஃபோர்ப்ஸ்…

jay

 

கலிபோர்னியாவில் உள்ள பிரபல கிளவுட் பாதுகாப்பு நிறுவனமான Zscaler-ன் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெய் சௌத்ரி, உலகப் புகழ்பெற்ற சைபர் பாதுகாப்பு ஜாம்பவான் என்பது பலர் அறிந்ததே. 66 வயதாகும் அவர், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி சுமார் 17 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் தொழில் நுட்ப உலகில் உச்சம் தொட்டிருக்கிறார்.

பல நிறுவனங்களை ஆரம்பித்து, அவற்றை வெற்றிகரமாக விற்ற இவரின் வெற்றிக்கு பின்னால் இருப்பது யார் தெரியுமா? தன் மனைவி ஜோதி சௌத்ரிதான் என்கிறார் அவர். அதனால்தான், புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அவர் அடிக்கடி ஒரு முக்கியமான அறிவுரையை சொல்வாராம்: “ஒரு வெற்றிகரமான ஸ்டார்ட்அப் வேண்டுமானால், உங்கள் மனைவியை ஒரு பங்காளியாக இணைத்து கொள்ளுங்கள் என்று தன் அனுபவத்தில் இருந்து கூறுகிறார்.

SecureIT, AirDefense, CipherTrust, CoreHarbor என பல நிறுவனங்களை வெற்றிகரமாக தொடங்கி, இந்த நிறுவனங்கள் நல்ல நிலைக்கு வந்தவுடன் ஒரு பெரிய தொகைக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால் தன்னுடைய இந்த வெற்றிக்கு மிகவும் முக்கியமான நபர் என் மனைவி ஜோதி சௌத்ரிதான் என்றும், அவர் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமாகியிருக்காது என்றும் உறுதியாக கூறுகிறார்.

1996ஆம் ஆண்டு ஜெய் செளத்ரி, ஜோதியை திருமணம் செய்த பின்னர் இருவரும் இணைந்து தொடங்கிய முதல் நிறுவனம் SecureIT.என மனைவி வலுவான நிதி பின்னணியையும், MBA பட்டத்தையும் கொண்டவர்; நான் பொறியியல் மற்றும் தயாரிப்பு பின்னணியில் இருந்து வந்தவன். ஒரு நிறுவனத்தை எப்படி தொடங்குவது, சம்பளம், சலுகைகள் போன்ற அடிப்படை விஷயங்களில் தனக்கு நிபுணத்துவம் இல்லை. ஒரு கம்பெனியை எப்படி பதிவு செய்வது என்பது கூட எனக்கு தெரியாது. ஆனால் அது எல்லாம் என் மனைவிக்கு தெரியும். இந்த அத்தியாவசியமான பணிகளை ஜோதி ஏற்றுக்கொண்டதால், SecureIT அபார வளர்ச்சி கண்டது. வீட்டு நிதி விஷயத்திலும் சரி, நிறுவன விஷயத்திலும் சரி, எனக்கு நிதி நிலைமை பத்தி எனக்கு எதுவும் தெரியாது, எல்லோமே என் மனைவி தான் பார்த்து கொள்வார் என மனைவியை பாராட்டி சிரிக்கிறார்.

என் மனைவி ஜோதி கொஞ்சம் பழமைவாத குணம் கொண்டவர். நான் சில சமயம் ஆபத்தான முடிவுகளை எடுக்க துணியும்போது, அவர் என்னை இழுத்துப் பிடித்து தடுத்துவிடுவார். அப்போதெல்லாம் அவர் சொன்னபடி நடந்ததால் பல நஷ்டங்கள் தவிர்க்கப்பட்டது. ஜோதியின் நிலையான, அமைதியான குணம் தனக்கு மிகவும் உதவியது என்று அவர் நெகிழ்ந்தார். இந்த வெற்றிக்கு தனது மனைவியின் பங்குதான் முக்கியம் என்பதை ஜெய் சௌத்ரி மீண்டும் மீண்டும் அழுத்தமாக பதிவு செய்கிறார்.