திடீரென கைகோர்த்த சீனா – பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்.. CPEC திட்டத்தால் இந்தியா சுற்றி வளைக்கப்படுகிறதா?

  சீனா-பாகிஸ்தான் CPEC திட்டம், ஆப்கானிஸ்தானுக்கு விரிவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இது “மூன்று தரப்பு” ஒத்துழைப்பை மேம்படுத்தும் பெரும்…

cpec

 

சீனா-பாகிஸ்தான் CPEC திட்டம், ஆப்கானிஸ்தானுக்கு விரிவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இது “மூன்று தரப்பு” ஒத்துழைப்பை மேம்படுத்தும் பெரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

CPEC விரிவாக்க அறிவிப்பை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஈ, பாகிஸ்தான் அமைச்சர் இஷாக் டார் மற்றும் ஆப்கானிஸ்தானின் ஆபரேஷன் வெளிவிவகார அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி ஆகியோர் பீஜிங்கில் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு கூட்டாக அறிவித்துள்ளார்.

CPEC என்றால் என்ன? என்பதை தற்போது பார்ப்போம். CPEC என்பது சீனா-பாகிஸ்தான் இடையே Belt and Road Initiative திட்டத்தின் முக்கியமான திட்டமாகும், 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது சீனாவின் ஜின்சியாங் மண்டலத்தை பாகிஸ்தானின் க்வாடார் போர்ட்டுடன் தரை வழியாக இணைக்கும். ரயில்வே வழியாக எரிசக்தி திட்டங்கள் இணைக்கிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மேம்படும்.

இந்தத் திட்டம் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்கான ஊக்கம் என்றும், சீனாவுக்கு அரபிக் கடலுக்கு நேரடி அணுகலை வழங்கும் வாய்ப்பாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் CPEC-ன் விரிவாக்கம் என்ற பெயரில் பாகிஸ்தான் மட்டுமின்றி ஆப்கானிஸ்தானும் இதில் இணைகிறது. இந்த திட்டத்தில் ஆப்கானிஸ்தான் சாலைகள், ரயில்வே இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் முழு பிராந்தியமும் சீனாவின் மேற்கு பகுதியின் வர்த்தக மற்றும் லாஜிஸ்டிக் வலையமைப்புடன் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதில் கீழ்க்காணும் அம்சங்கள் உள்ளன:

ML-1 ரயில்வே பாதையை விரிவாக்கி ஆப்கானிஸ்தான் சரக்கு பாதைகளுடன் இணைத்தல்

டோர்காம் மற்றும் ஸ்பின் போல்டக் பகுதிகளின் வழியாக நெடுஞ்சாலைகள் கட்டுதல்

ஆப்கானிஸ்தானின் பெரும் லித்தியம் மற்றும் அரிய பூமி வளங்களுக்கு சீனாவின் அணுகல்

ஈரான் மற்றும் மத்திய ஆசியா வழியாக ஆப்கானிஸ்தான் நிலப்பரப்பில் எரிசக்தி குழாய்கள் இணைப்பு

வர்த்தக உள்கட்டமைப்பாக மூடிய இராணுவ லாஜிஸ்டிக் நடவடிக்கைகள்

இதில் இந்தியாவின் கவலை என்னவெனில் CPEC பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியாக கடந்து போகிறது. இந்தியா இதை தனது பிரதேசமாக கருதி வரும் நிலையில் இந்த பகுதியை மீட்போம் என்று கூறி வரும் நிலையில் இந்த திட்டத்தை இந்தியா கண்டிக்கிறது.

CPEC-ஐ சீனாவின் உள்கட்டமைப்பு மற்றும் இராணுவ கூட்டாண்மைகள் மூலம் இந்தியாவை சுற்றி வளைக்க செய்யும் முயற்சி எனவும், இதன் மூலம் சீனா தென் ஆசியாவில் தாக்கத்தை அதிகரிக்க முயற்சிக்கிறது எனவும் இந்தியா கருதுகிறது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷுடன் கூடிய சீனாவின் கட்டமைப்பு மற்றும் இராணுவ திட்டங்கள் இதன் சாட்சி.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் மற்றும் பலூச்சிஸ்தான் வழியாக CPEC கட்டப்படும் உள்கட்டமைப்புகள் இந்தியாவின் பாதுகாப்பு கவலைகளை அதிகரிக்கின்றன. இதனால் பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு அந்த பிராந்தியத்தில் இராணுவச் செயல்திறன் அதிகரிக்கும்.

மேலும் CPEC காரணமாக மத்திய ஆசியா மற்றும் ஈரானில் உள்ள சபாஹர் போர் போன்ற பிராந்திய இணைப்பு திட்டங்கள் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சப்படுகின்றது. புதிய வர்த்தக வழிகள் இந்தியாவை தவிர்த்து செல்லும் வாய்ப்பு உள்ளது.

முன்பு ஜெய்ஷ்-எ-மொஹம்மத் மற்றும் லஷ்கர்-எ-தைபா போராளிகளை தாங்கிய தாலிபான் ஆட்சி மீண்டும் இந்தியா எதிரான நடவடிக்கைகளுக்கான தளமாக அமையக்கூடும். சீன நிதியுதவி மற்றும் பாகிஸ்தானின் குற்றவியல் நடவடிக்கைகள் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக அமைய வாய்ப்புள்ளது.

CPEC இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நன்மைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இந்தியா இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தென் ஆசியாவில் தன்னுடைய தாக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் அரசியல் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.