சிந்தூர் வெடிகுண்டாக மாறினால் எப்படி இருக்கும் என எதிரிக்கு காட்டியுள்ளோம்: பிரதமர் மோடி

  பாகிஸ்தானை தாக்கிய இந்திய ஆயுதப்படைகளின் செயலுக்காக “ஆபரேஷன் சிந்தூரை” பிரதமர் நரேந்திர மோடி இன்று நடந்த ஒரு கூட்டத்தில் பாராட்டினார். ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,…

modi

 

பாகிஸ்தானை தாக்கிய இந்திய ஆயுதப்படைகளின் செயலுக்காக “ஆபரேஷன் சிந்தூரை” பிரதமர் நரேந்திர மோடி இன்று நடந்த ஒரு கூட்டத்தில் பாராட்டினார்.

ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் அமைந்திருந்த தீவிரவாத முகாம்களை வெறும் 22 நிமிடங்களில் அழித்ததாக அவர் தெரிவித்தார்.

ராஜஸ்தானின் பிகானேர் பகுதியில் நடந்த பொது கூட்டத்தில் மோடி உரையாற்றும் போது, “எங்கள் அரசு மூன்று ஆயுதப்படைகளுக்கும் முழுமையான சுதந்திரம் வழங்கியது. அவர்கள் சேர்ந்து அமைத்த திட்டத்தால் பாகிஸ்தான் முடங்கியது’ என்றார்.

அதேபோல், “22-ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு பதிலளிக்க, 22 நிமிடங்களில் 9 பெரிய தீவிரவாத முகாம்களை நாங்கள் நாசம் செய்தோம்… ‘சிந்தூர்’ வெடிபொருளாக மாறினால் அது எப்படியிருக்கும் என்பதை நாட்டின் மற்றும் உலகின் எதிரிகள் கண்டுவிட்டனர்,” எனவும் கூறினார்.

மோடி மேலும் தெரிவித்ததாவது: “ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் கோபத்தால் செயல்பட்டது அல்ல; இது ஒரு வலிமையான இந்தியாவின் உறுதி நிறைந்த முகம். இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; இது புதிய நீதி நடைமுறை. இதுவே பாரதத்தின் புதிய அடையாளம்,” என்று பிரதமர் மோடி கூறினார்.