ஒரு AI சாட்போட் இந்தியாவின் மிகக் கடினமான JEE அட்வான்ஸ்டு தேர்வில் கலந்து கொண்டால் என்ன ஆகும்? ஐஐடி காரக்பூர் பொறியாளர் அனுஷ்கா ஆஷ்வி, ChatGPT-o3 ஐ 2025 JEE அட்வான்ஸ்டு கேள்வித்தாளில் சோதனைக்கு உட்படுத்தி சோதனை செய்தார். இதன் முடிவு? 360 க்கு 327 மதிப்பெண்கள்களை ChatGPT பெற்றது.
அனுஷ்கா தனது பதிவில் ChatGPTக்கு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொடுக்கும் அனைத்து நிபந்தனைகளும் கொடுக்கப்பட்டது. வெளிப்புற கருவிகள் பயன்படுத்த கூடாது, பைத்தான் பயன்படுத்த கூடாது, முந்தைய பதில்களை பார்க்க கூடாது போன்ற நிபந்தனைகளை ChatGPT ஏற்று கொண்டது.
ஒவ்வொரு கேள்வியும் தனித்தனியாக கேட்கப்பட்டதில் ChatGPT சிக்கலான கணிதம் மற்றும் அறிவியல் கேள்விகளை எளிதாக தீர்த்தது, சிறந்த மாணவர்களை கூட தடுமாறச் செய்யும் கேள்விகளுக்கு ChatGPT எளிதில் பதிலளித்தது. ஆனால் அதே நேரத்த்ல் வரைபடங்கள் அல்லது வெர்னியர் அளவுகோல்கள் போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க திணறியது.
முடிவில் ChatGPT o3 ஆனது JEE அட்வான்ஸ்டு 2025 கேள்வித்தாளில் 327/360 மதிப்பெண்ணை பெற்றது. இந்த மதிப்பெண் அகில இந்திய அளவில் 4வது இடத்தை பிடித்த மாணவர் பெற்ற மதிப்பெண்களுக்கு இணையானது.
இந்த சோதனையில், பைதான் போன்ற வெளிப்புற கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், ChatGPT அவ்வப்போது அவ்வாறு செய்ய முயற்சித்தது, இது பதிலளிப்பதற்கு முன் அதன் “சிந்தனை” இடைவெளிகளின் போது தெளிவாக தெரிந்தது. அதுமட்டுமின்றி ChatGPT அடுத்த கேள்விக்கு செல்வதற்கு முன் முந்தைய பதில்களை இருமுறை சரிபார்க்கவும் செய்தது. இது ஒரு புத்திசாலி மாணவரின் நடத்தையைப் பிரதிபலிக்கிறது.
இந்த சோதனையில் இருந்து ChatGPT சிக்கலான கணித சிக்கல்களை, குறிப்பாக இயற்கணிதம் மற்றும் கால்குலஸ் ஆகியவற்றுக்கு எளிதில் பதில் எழுதியது. சரியான பதிலை கண்டறிய வெவ்வேறு தலைப்புகளில் இருந்து யோசனைகளை ஒன்றாக பயன்படுத்த வேண்டியிருந்தபோதும் அது சிறப்பாக செயல்பட்டது. வேதியியலில், ChatGPT கேள்விகளைப் புரிந்து கொண்டு பதிலை சில எடுத்துக்காட்டுடன் கொடுக்க முயற்சித்தது.
ஆனால் வரைபடங்களைப் புரிந்துகொள்வதில் மட்டும் ChatGPTக்கு கடினமாக இருந்தது. சில கேள்விக்கு 9 நிமிடங்களுக்கு மேல் டைம் எடுத்து கொண்டது. அப்போதும் கூட, சில பதில் தவறாக இருந்தது. AI வெர்னியர் அளவுகோல் போன்ற கருவிகளை சரியாகப் படிக்க முடியவில்லை. அது மீண்டும் மீண்டும் முயற்சித்ததும் தவறான பதிலையே கொடுத்தது என்று அனுஷ்கா பதிவு செய்துள்ளார்.
இந்த சோதனையில் இருந்து ChatGPT ஒரு கடினமான தேர்வை கூட மிக எளிதில் எழுதி நல்ல மதிப்பெண் பெற முடியும் என்பதை நிரூபித்துள்ளது.