டெக்சாஸைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன், 7 வினாடிகளில் இதய நோயை கண்டறியும் ஒரு செயலியை கண்டுபிடித்து, மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சித்தார்த் நந்தியாலா என்ற14 வயது சிறுவன் Circadian AI என்ற ஒரு ஸ்மார்ட்போன் செயலியை உருவாக்கியுள்ளார். இது இதய நோயின் ஆரம்ப அறிகுறிகளை துல்லியமாக கண்டறியும் திறன் கொண்டது. ஸ்மார்ட்போனை மார்புக்கு அருகில் வைப்பதன் மூலம், அப்ளிகேஷன் இதயத் துடிப்பைப் பதிவுசெய்து, பின்னணி இரைச்சலை நீக்கி, கிளவுட் அடிப்படையிலான இயந்திர கற்றல் மாதிரி மூலம் இதயத்தை ஆய்வு செய்கிறது. இது arrhythmia), இதய செயலிழப்பு கரோனரி தமனி நோய் (coronary artery disease) மற்றும் வால்வு பிரச்சனைகள் (valve problems) போன்றவற்றை கண்டறியும் திறன் கொண்டது.
டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவரான சித்தார்த், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் மருத்துவ துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த இலக்கு வைத்துள்ளார். அவர் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து டேட்டாக்களை சேகரித்து, மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளார்.
15,000 அமெரிக்க மற்றும் 3,500 இந்திய இதய நோயாளிகளை மருத்துவ பரிசோதனைகள் செய்து இந்த செயலி 96% க்கும் அதிகமான துல்லியத்துடன் செயல்படுவதை நிரூபித்துள்ளார். தற்போது, இந்த செயலி இனி மருத்துவ ஊழியர்களாலி, பயன்படுத்தப்பட உள்ளது, மேலும் இது ஈ.கே.ஜி (EKG) போன்ற பாரம்பரிய முறைகளுக்குப் பதிலாக ஒரு முன்-பரிசோதனை கருவியாக செயல்படும்
இருதயநோய் நிபுணர்கள் சித்தார்த்தின் இந்த கண்டுபிடிப்பைப் பாராட்டியுள்ளனர், குறிப்பாக குறைந்த சுகாதார வசதிகள் உள்ள பகுதிகளில் இதன் பயன்பாடு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளனர்.
இதய நோயால் 32% க்கு அதிகமானோர் மரணம் அடைந்து வரும் நிலையில் இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான தேவையை நிவர்த்தி செய்கிறது. லூசியானா மாநில பல்கலைக்கழகத்தின் டாக்டர். ஜமீலா அகமதுவின் இந்த செயலி குறித்து கூறியபோது “மருத்துவர்களை எளிதில் அணுக முடியாத நோயாளிகள் ஆரம்பத்திலேயே இதய நோயை அறிந்து கொண்டு தகுந்த சிகிச்சை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த செயலி சித்தார்த்தின் முதல் பெரிய கண்டுபிடிப்பு அல்ல. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மாணவரான அவர், இதற்கு முன்னர் குறைந்த செலவில் ஒரு செயற்கை கை (prosthetic arm) ஒன்றை உருவாக்கினார், மேலும் மாணவர்களுக்கு அறிவியல்-தொழில்நுட்ப கருவிகளை வழங்கும் STEM IT என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தையும் நிறுவினார். அவரது பங்களிப்புகள், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் அங்கீகாரச் சான்றிதழ் (Certificate of Recognition) மற்றும் அப்போதைய ஜனாதிபதி ஜோ பிடனின் பாராட்டு கடிதம் உட்பட குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
எதிர்காலத்தில், நிமோனியா மற்றும் நுரையீரல் ரத்த உறைவு (pulmonary embolism) போன்ற நுரையீரல் நோய்களைக் கண்டறியும் வகையில் தனது அப்ளிகேஷனின் திறன்களை விரிவுபடுத்த சித்தார்த் திட்டமிட்டுள்ளார். “உலகத்தை மேம்படுத்தும் ஒரு மாற்றத்தை நான் கொண்டு வர விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.