மனிதர்கள் செய்யும் தவறால் சரிவின் விழும்பில் இருக்கும் பூமி! அதிர்ச்சி அப்டேட்!

நாம் வாழும் இந்த பூமி ஆனது மனிதர்களுக்கு எவ்வளவு நன்மைகளை செய்ய முடியுமோ அவ்வளவு நன்மைகளை செய்கிறது. ஆனால் மனிதர்களோ தங்களால் எந்த அளவிற்கு இந்த பூமியை மாசுபடுத்த முடியுமோ அந்த அளவிற்கு மாசுப்படுத்துகிறோம்.

இந்த பாதிப்புகளின் விளைவுகளை பற்றி ஏற்கனவே பல்வேறு ஆய்வு கட்டுரைகள் வெளிவந்தாலும் தற்போது வந்திருக்கும் ஒரு ஆய்வறிக்கையில் பூமியானது 80 சென்டிமீட்டர் கிழக்கு நோக்கி சாய்ந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆய்வு அறிக்கை பற்றிய முழு தகவல்களையும் நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

மனிதன் உயிர் வாழ தேவையான அடிப்படை ஆதாரங்களில் நீர் முதன்மையானதாக உள்ளது. அத்தகைய இன்றையமையாத குடிநீரின் பெரும் பகுதி பூமியிலிருந்து தான் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. பல காலமாக தொடரும் இந்த நடவடிக்கை தற்போது பூமியின் சுழற்சியை பாதித்துள்ளது என அமெரிக்க புவியியல் ஒன்றியத்தில் நாளிதளான ஜியோ பிஸிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் ஒரு ஆராய்ச்சி முடிவினை வெளியிட்டு இருக்கிறது.

கடந்த காலங்களில் இது போன்ற துருவங்களில் சருக்கள் என்பது கடல் நீரோட்டங்கள் மற்றும் பூமிக்கு அடியில் ஆழமான வெப்ப பாறைகளின் வெப்பச்சலனம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் மட்டுமே ஏற்பட்டது. ஆனால் ஜீரோ பிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மனிதர்கள் நிலத்தடி நீரை உறிஞ்சியதே இந்த பூமியின் சாய்வுக்கான முதன்மை காரணி என்று கண்டறிந்துள்ளது.

ஜீரோ பிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ் அறிக்கையில் மனிதர்கள் நிலத்திற்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுத்து பயன்படுத்தி வருவதன் காரணமாக 1993 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பூமி 80 சென்டிமீட்டர் அளவுக்கு கிழக்கு பகுதியில் சாய்ந்து உள்ளது. இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் மக்கள் 2150 ஜிகா டன் நிலத்தடி தண்ணீரை வெளியேற்றி இருக்கிறார்கள்.

இது 6 மில்லி மீட்டர் கடல் மட்டத்திற்கு சமமானதாகும். நிலத்தடி நீரை மறு பகிர்வு செய்வதில் மேற்கு வட அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது என கூறுகிறார்கள். அதே நேரம் நீரின் சரியான அளவை மதிப்பிடுவது கடினம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால் காலநிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, அதை வேளையில் புவியியல் நேர அளவீடுகளில் துருவச் சருக்கள் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

யூடியூப்பிற்கு போட்டியாக எலான் மஸ்க் எடுக்கும் புதிய முயற்சி!

2016 ஆம் ஆண்டு ஆய்வின்படி இந்திய துணை கண்டமும், காஸ்பியன் கடலும் நிலத்தடி நீரை பெருமளவு இழந்ததாகவும் இதனால் பூமியின் சுழற்சி அச்சு கிழக்கு நோக்கி நகர்ந்ததாகவும் கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு புவி இயற்பியல் ஆய்வு கடிதங்களில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு 1995 ஆம் ஆண்டில் வட துருவம் கிழக்கு நோக்கி 1995 முதல் 2020 ஆம் ஆண்டு இந்த சருக்கள் 1981 முதல் 1995இல் இருந்ததை விட கிட்டத்தட்ட 17 மடங்கு வேகமானது என்றும் கூறியுள்ளனர்.

அனைத்து பிரச்சனைகளுக்குமே தீர்வு ஒன்று இருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பல வருடங்களுக்கு நீடித்தால் மட்டுமே அது பலன் அளிக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews