குறி வச்சா இரை விழனும்.. புற்றுநோயால் பாதிப்பு.. இறந்துவிடுவார் என கைவிடப்பட்டவர்.. அடுத்தடுத்த கிடைத்த 3 லாட்டரி பரிசு..

  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், தகுந்த சிகிச்சை அளிக்க பணம் இல்லை என்ற நிலையில், அவர் இறந்து விடுவார் என்று கைவிடப்பட்டதாகவும், ஆனால் அடுத்தடுத்து அவருக்கு மூன்று முறை மிகப்பெரிய தொகையில் லாட்டரி சீட்டு…

lottory

 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், தகுந்த சிகிச்சை அளிக்க பணம் இல்லை என்ற நிலையில், அவர் இறந்து விடுவார் என்று கைவிடப்பட்டதாகவும், ஆனால் அடுத்தடுத்து அவருக்கு மூன்று முறை மிகப்பெரிய தொகையில் லாட்டரி சீட்டு பரிசு விழுந்ததால், அவரது வாழ்வில் திடீர் திருப்பம் ஏற்பட்டதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கனடாவை சேர்ந்த டேவிட் என்பவர், கடந்த ஒரு வருடத்தில் மூன்று முறை மிகப்பெரிய லாட்டரி பரிசுகளை பெற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த 9 மாதங்களில் மட்டும், அவர் 7 மில்லியன் டாலருக்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றுள்ளார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காகவே அவர் நிறைய செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், அவர் ஏராளமாக செலவு செய்தும் கூட, அவரை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கைவிட்டதாகவும், அதன் பின்னர்தான் அவரது வாழ்வில் திடீர் திருப்பம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலில், அவருக்கு 5 மில்லியன் டாலர் லாட்டரி சீட்டின் மூலம் பரிசு கிடைத்தது. இதனை அடுத்து, அவர் தனது புற்றுநோயை குணப்படுத்த உயர் சிகிச்சை பெற்றார் என்பதும், படிப்படியாக நோயிலிருந்து மீண்டு வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், 3 மாதங்களில் அவருக்கு மீண்டும், அதாவது நவம்பர் மாதம், இன்னொரு லாட்டரி பரிசு கிடைத்தது என்றும், அதிலும் அவருக்கு 1 மில்லியன் டாலர் கிடைத்ததாகவும் வருகிறது.

அடுத்தடுத்து இரண்டு முறை லாட்டரி பரிசுகளை வென்றதால், தனது நோயை குணப்படுத்தியதுடன், தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அந்த பரிசு தொகையின் மூலம் உதவி செய்தார்.

இந்த நிலையில், தற்போது அவருக்கு மூன்றாவது முறையாக, சுமார் 1 மில்லியன் டாலர் லாட்டரி பரிசு கிடைத்துள்ளது. நான் என் வண்டிக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருக்கும்போது, அருகில் இருந்த லாட்டரி சீட்டு கடையில் இந்த டிக்கெட்டை வாங்கினேன். இப்போது மீண்டும் பரிசு பெற்றுள்ளேன்,” என்று அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 9 மாதங்களில், அவருக்கு 7 மில்லியன் டாலருக்கு மேல் லாட்டரி பரிசு கிடைத்ததாகவும், இது எப்படி சாத்தியம் என்று லாட்டரி சீட்டு விற்பனையாளர் ஆச்சரியமடைந்ததாகவும் கூறப்படுகிறது. கனடா லாட்டரி சீட்டின் படி, மூன்று கோடியில் ஒருவருக்கு தான் ஜாக்பாட் வெல்லும் சாத்தியம் இருக்கிறது. ஆனால், டேவிட் ஒரே வருடத்தில் மூன்று முறை லாட்டரி பரிசு வென்றதை அடுத்து, அவர் ஆச்சரியப்படத்தக்க மனிதராக மாறி உள்ளார்.

“நான் 1982 முதல் லாட்டரி சீட்டு வாங்கி வருகிறேன். எந்த லாட்டரி எண்ணுக்கு பரிசு விழும் என்று என்னால் ஓரளவு கணிக்க முடியும். வென்றால் மகிழ்ச்சியாக இருப்பேன். வெல்லவில்லை என்றால் மீண்டும் முயற்சி செய்வேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

“நான் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவன் மற்றும் ஓய்வு பெற்றவன். என்னுடைய இந்த அதிர்ஷ்டத்திற்கு, நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பரிசை வைத்து என் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை தருவேன். நண்பர்களுக்கும் உதவி செய்வேன்,” என்று கூறியுள்ளார்.

முதல் முறை லாட்டரி பரிசு வென்ற பிறகு, புற்றுநோயை குணப்படுத்தி, முதல் வேலையாக அவர் மனைவியை ஹவாய் தீவுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றார். சமீபத்தில் கூட, அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை தனது குடும்பத்துடன் சென்று உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

லாட்டரி மூலம் கிடைத்த பணத்தில் தனது குடும்பம், உற்றார் உறவினர், நண்பர்களையும் அவர் மகிழ்ச்சியாக வைத்துள்ளார் என்பதுதான் மிகச்சிறந்த விஷயம் என்று பொதுமக்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.