சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. சாலையில் தூங்கிய நபரை முகர்ந்து பார்த்த சிங்கம்.. 70 மில்லியன் பார்வையாளர்களுக்கு பின் திடீர் திருப்பம்..!

  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சாலையில் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் அருகில் வந்த சிங்கம் அவரை முகர்ந்து பார்த்துவிட்டு எதுவும் செய்யாமல் சென்று விடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில்…

lion

 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சாலையில் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் அருகில் வந்த சிங்கம் அவரை முகர்ந்து பார்த்துவிட்டு எதுவும் செய்யாமல் சென்று விடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பதிவான நிலையில், இந்த வீடியோவை பார்த்த பலர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த வீடியோவுக்கு இப்போது வரை 21 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்து இருக்கிறார்கள் என்பதும், ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஊருக்குள் எப்படி சிங்கம் வந்தது, அதுவும் ஒரு மனிதன் தூங்குவதை பார்த்து முகர்ந்து விட்டு தாக்காமல் எப்படி சென்றது? இது உண்மையில் சிங்கம்தானா? என்பது போன்ற பல கேள்விகளை கமெண்ட் மூலம் பயனாளர்கள் எழுப்பி வந்தனர்.

இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வனத்துறையினர் தகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், சிங்கம் ஊருக்குள் வந்து மனிதர்களை பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் சிலர் அறிகுறித்தனர்.

இந்த நிலையில் இந்த வீடியோ உண்மையானது அல்ல; AI டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அப்டேட் நியூஸ் என்ற எக்ஸ் கணக்கின் மூலம் பகிரப்பட்ட இந்த வீடியோ குறித்து ஆய்வு செய்த தனியார் நிறுவனம் ஒன்று, இது உண்மையான வீடியோ அல்ல; முழுக்க முழுக்க AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ உண்மையான வீடியோ போலவே தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும், AI டெக்னாலஜி என்பது தற்போது ஆரம்பகட்டத்தில் தான் உள்ளது. இப்போதே இது போன்ற தத்ரூபமான வீடியோக்கள் வெளியாகும் நிலையில், எதிர்காலத்தில் இன்னும் மக்களை குழப்பம் அளவுக்கு, மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், AI என்ற டெக்னாலஜியை மக்கள் ஆக்கப்பூர்வமாக மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும், மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதற்கும், பயமுறுத்துவதற்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் அந்த தனியார் நிறுவனம் கேட்டுக் கொண்டது.

இந்த பதிவுக்கு தற்போது ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. இது AI வீடியோ என்பதையே நம்ப முடியவில்லை; “இதை எப்படி நீங்கள் AI வீடியோ என்று கூறுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.

https://x.com/UpdateNews724/status/1931277039039864918