’ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் ஒரு ரீசார்ஜ் திட்டம்.. BSNL அறிவித்த திட்டத்தில் என்னென்ன சலுகைகள்?

  அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, ஆபரேஷன் சிந்தூர் முயற்சியின் போது, இந்திய பாதுகாப்புப் படைகளின் வீரத்தை கௌரவிக்க ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி இந்த திட்டத்தில் ஒவ்வொருவரும் ரீசார்ஜ் செய்யும்போது,…

BSNL

 

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, ஆபரேஷன் சிந்தூர் முயற்சியின் போது, இந்திய பாதுகாப்புப் படைகளின் வீரத்தை கௌரவிக்க ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி இந்த திட்டத்தில் ஒவ்வொருவரும் ரீசார்ஜ் செய்யும்போது, அதில் இருந்து பெறப்படும் தொகையின் ஒரு பகுதி பாதுகாப்புத் துறைக்கு நன்கொடையாக வழங்கப்படும். மேலும் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

இந்த திட்டத்தின்படி BSNL வாடிக்கையாளர் ஒருவர் ரூ.1,499 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், அந்த தொகையின் 2.5% பாதுகாப்புத் துறைக்கு நன்கொடையாக வழங்கப்படும். அதேபோல், 2.5% கேஷ்பேக் வாடிகையாளர் கணக்குக்கு வழங்கப்படும். இந்த சலுகை ஜூன் 30 வரை மட்டுமே செயல்படும்.

ரூ.1,499 என விலை நிர்ணயிக்கப்பட்ட இந்த திட்டம், 336 நாட்கள் கால வரம்பு உண்டு.

மேலும் இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற வாய்ஸ்கால் அழைப்புகள்

இலவச தேசிய ரோமிங் வசதி

ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ்

மொத்தம் 24 ஜிபி டேட்டா

இது தவிர, 24 ஜிபி டேட்டா முடிந்த பிறகும், வாடிக்கையாளர்கள் 40 kbps வேகத்தில் வரம்பற்ற இன்டர்நெட் மூலம் இணையத்தை பயன்படுத்த முடியும்.