உலகின் மிக உயர்ந்த செனாப் பாலத்தை கட்டியவர்களில் ஒருவர் சென்னை ஐஐடி மாணவி.. குவியும் வாழ்த்துக்கள்..!

  பிரதமர் மோடி சமீபத்தில் உலகின் மிக உயரமான பாலமான செனாப் பாலத்தை திறந்து வைத்தார் என்பதும், ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள இந்த பாலம் தற்போது கம்பீரமாக காட்சி அளிக்கிறது என்பதும் தெரிந்தது. ஜம்முவில்…

madhavi latha

 

பிரதமர் மோடி சமீபத்தில் உலகின் மிக உயரமான பாலமான செனாப் பாலத்தை திறந்து வைத்தார் என்பதும், ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள இந்த பாலம் தற்போது கம்பீரமாக காட்சி அளிக்கிறது என்பதும் தெரிந்தது.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இந்த பாலத்தின் வழியாக தான் செல்கிறது என்பது 359 மீட்டர் உயரத்தில் ஆற்றுக் கீழே கட்டப்பட்ட ஒரு பொறியியல் அதிசயமாக தான் இந்த பாலம் பார்க்கப்படுகிறது. பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட உயரமானது இந்த செனாப் பாலம் என்பதும், இது உலகின் மிக உயரமான ரயில்வே வளைவு பாலமாக கருதப்படுகிறது.

467 மீட்டர் வளைவு பரப்பளவு மற்றும் 1,315 மீட்டர் மொத்த நீளம் கொண்ட இந்த பாலம், இந்தியாவின் கட்டுமானத்துறையின் அடையாளமாக காணப்படுகிறது. ஒரு மணிக்கு 260 கிலோமீட்டர் வரை காற்றழுத்தங்களை தாங்கும் வகையில் கட்டப்பட்ட இந்த பாலம் 120 ஆண்டுகள் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாலத்தை கட்டுவதற்கு 1,486 கோடி ரூபாய் செலவானதாகவும், பொறியியல் மற்றும் நிலவியல் சவால்களை பொறியாளர்கள் இந்த பாலத்தை கட்டும்போது சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த பாலத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்த ஏராளமான பொறியாளர்களில் ஒருவர் மாதவி லதா. ஆந்திராவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். தனது சமூகத்தில் முதல் முறையாக பொறியாளராக ஆன இவர், காக்கினாடாவில் பி.டெக் படித்து முடித்து, அதன் பின் NIT வாரங்கலில் எம்.டெக் படித்து முடித்தார். பின்னர் சென்னை ஐஐடியில் பிஹெச்.டி பட்டம் பெற்றார். 2003 முதல் பெங்களூரில் பணியாற்றினார்.

செனாப் பாலம் கட்டுவதில் இவர் முக்கிய பங்கு கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறிய போது, “செனாப் பாலம் கட்டுவதில் முக்கிய பங்கு வகித்ததில் நான் பெருமையாக கருதுகிறேன். இந்த பொறியியல் அதிசயத்தை மிகவும் சிரமப்பட்டு நிகழ்த்தினோம். இன்ஜினியரிங் துறையில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. அனைத்து பொறியியல் வல்லுநர்களுக்கும் எனது நன்றி,” என தெரிவித்தார்.

சென்னை ஐஐடியில் படித்த ஒரு மாணவி, செனாப் பாலம் கட்டுவதில் ஒரு பங்கில் இருந்தது என்பது பெருமைக்குரியதாக பார்க்கப்படுகிறது