முதலிரவில் கத்தியை காட்டி மிரட்டிய மணப்பெண்.. அதிர்ச்சியில் மணமகன்..!

காதலன் ஒருவரை காதலித்து வந்த பெண், அவரை திருமணம் செய்து கொள்ள முடியாமல் வேறு ஒருவரை மணந்த நிலையில், தனது முதலிரவில் கணவனை கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணப்பெண்…

marriage 1

காதலன் ஒருவரை காதலித்து வந்த பெண், அவரை திருமணம் செய்து கொள்ள முடியாமல் வேறு ஒருவரை மணந்த நிலையில், தனது முதலிரவில் கணவனை கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணப்பெண் இவ்வாறு நடந்து கொண்டது கணவனுக்கு அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த நிஷாத் என்ற ராணுவ வீரருக்கும் அதே பகுதியை சேர்ந்த சித்தாரா என்ற பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்தபோது படுக்கையறையில் கணவனுக்கும் மனைவிக்கும் திடீரென சண்டை நடந்துள்ளது.

“நான் அமன் என்பவரை காதலிக்கிறேன். அவருக்கு தான் நான் உண்மையான மனைவி. நீ என்னை தொட்டால் உன்னை துண்டு துண்டாக வெட்டி விடுவேன், என்று பழங்கள் நறுக்க வைத்திருந்த கத்தியை காட்டி மணப்பெண் சித்தாரா, நிஷாத்தை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நிஷாத், அந்த முழு இரவும் சோபாவில் அமர்ந்து இருந்துள்ளார்.

மூன்று நாட்களாக இதே சம்பவம் நடந்துள்ளது. அதுமட்டுமின்றி, தனது கணவரை தூங்க விடாமல், இந்த மணப்பெண் கத்தியை வைத்துக்கொண்டு படுக்கையறையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிஷாத் தனது தாயிடம் இந்த விஷயத்தை தெரிவித்ததை அடுத்து, மணப்பெண்ணின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, பஞ்சாயத்து முன்னிலையில் இரு தரப்பினரும் பேசியுள்ளனர். ஆனாலும், சித்தாரா மீண்டும் தனது கணவரை மிரட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி, மே 30ஆம் தேதி வீட்டின் கதவை பூட்டிய நிலையில், அவர் பின் வாசல் வழியாகத் தப்பி சென்று தனது காதலன் அமனுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. திருமணமான மூன்று நாட்களில் இவ்வாறு நடந்தது நிஷாத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிஷாத்தின் சகோதரி பூனம் இதுகுறித்து கூறுகையில், தனது அண்ணன் திருமணம் முடிந்ததும் சோகமாக காணப்பட்டார். அது ஏன் என்று விசாரித்தபோது, சித்தாரா இந்த மாதிரி நடந்து கொண்டது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, சித்தாரா தனது முன்பே அமனிடம் செல்போனில் பேசியதாகவும், “தேவைப்பட்டால் உனது அண்ணனை கொலை செய்யத் தயங்க மாட்டேன்,” என்று சித்தாராவிகூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்திக்கு காதலித்த நபருடன் திருமணத்திற்கு முன்பே ஓடிப்போக வேண்டியது தானே, எதற்காக ஒரு அப்பாவி இளைஞன் வாழ்வில் விளையாடினாய்? எவன்டி உன்னை பெத்தான் பெத்தான் என்று நெட்டிசன்கள் இந்த சம்பவத்திற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.