பலூச் விடுதலைப் படை பாகிஸ்தான் இராணுவத்தின் வாகனத்தை தாக்கியதாக வெளியிட்டிருக்கும் வீடியோ பாகிஸ்தான் அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலூச் விடுதலைப் படைபேச்சாளர் ஜியந்த் பலூச் கூறியதாவது, இந்த தாக்குதல் ஆயுதம் தாங்கிய தற்கொலைப்படை வீரர்களின் தாக்குதல் என்று கூறினார்.
மேலும் எங்கள் பிராந்தியத்தில் சாதாரண நிலைமை நிலவுகிறது என்பதைக் காட்ட பாகிஸ்தான் அரசாங்கம் முயற்சி மேற்கொள்கிறது என்றும் பலூச் விடுதலைப் படை தெரிவித்துள்ளது. பலூச் விடுதலை இயக்கம் மக்கள் ஆதரவுடன் மேலும் வலுவடைவதாகவும், இந்த சம்பவம் அதற்கான சான்றாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர். மேலும் இந்த தாக்குதல் மே 9 ஆம் தேதி நடத்தப்பட்டது என்றும் இதில் 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலைப் படை வீடியோ வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்று நள்ளிரவு, மஸ்தூங் பகுதியில் உள்ள MCC கிராஸ் என்ற இடத்தில் பாகிஸ்தான் இராணுவம் அமைத்திருந்த சோதனைச்சாவடிக்கு பலூச் விடுதலைப் படை போராளிகள் கைகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் நால்வர் படையினர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சாவடியில் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அநாகரிகமாக நடத்தப்பட்டதாகவும் அதற்கு பழிவாங்கவே இந்த தாக்குதல் என்றும் பலூச் விடுதலைப் படை கூறியுள்ளது.
அதேபோல் பலூச் விடுதலைப் படை மே 14 அன்று மஷ்கேய், கோல்வா, பாரூம் மற்றும் கோமாசியில் நடத்திய தொடர் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது.
BLF பேச்சாளர் மேஜர் குவாஹ்ரம் பலூச் கூறியதாவது: “மே 14 காலை 8 மணியளவில் மஷ்கேயில் உள்ள கந்தாடியில் பாதுகாப்புப் படையினரை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வாகனம் அழிவடைந்து பலர் உயிரிழந்தனர். அதே நாள் மாலை 4:30 மணிக்கு, கோல்வா பகுதியிலுள்ள பத்ராங் என்ற இடத்தில் பாகிஸ்தான் இராணுவ முகாமில் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் கூறியுள்ளது.
மேலும் பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படும் உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் மற்றும் சரக்குகள் வழங்குபவர்கள் எதிர்காலத்தில் குறிவைக்கப்படுவர் எனவும், அவர்களும் அவர்களது உடமைகளும் “சட்டபூர்வ இலக்குகள்” எனக் கருதப்படும் எனவும் பலூச் விடுதலைப் படை எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் அரசு பலூச் விடுதலைப் படை கூறியது குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ பதிலும் வழங்கவில்லை.
https://x.com/MeghUpdates/status/1922862174021558750