விஜய் கூட்டணிக்கு வராவிட்டால் ஜெயிக்க முடியாது.. புரிந்து கொண்ட ஈபிஎஸ்.. டெல்லிக்கு ரகசிய விசிட்.. கழன்று கொள்கிறதா பாஜக?

  அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணி அறிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், அந்த கூட்டணி மக்கள் மத்தியில் இன்னும் நம்பிக்கையை பெறவில்லை. அதுமட்டுமின்றி, இந்த கூட்டணிக்கு வருவதற்கு பிற அரசியல் கட்சிகளும் தயக்கம் காட்டுகின்றன என்பது…

vijay eps amitshah

 

அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணி அறிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், அந்த கூட்டணி மக்கள் மத்தியில் இன்னும் நம்பிக்கையை பெறவில்லை. அதுமட்டுமின்றி, இந்த கூட்டணிக்கு வருவதற்கு பிற அரசியல் கட்சிகளும் தயக்கம் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வர திட்டமிட்டுள்ள கட்சிகள் கூட அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்ல முடியாத நிலைக்கு ஒரே காரணம் பா.ஜ.க.தான் என்றும், எனவே அ.தி.மு.க. இதனை நன்கு பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, அ.தி.மு.க. தரப்பிலிருந்து யாராவது ஒரு முக்கிய பிரமுகர் டெல்லிக்கு சென்று பா.ஜ.க. தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும், “நீங்கள் எங்கள் கூட்டணியில் இருப்பதால் இந்த கூட்டணிக்கு பலவீனம் தான் ஏற்பட்டுள்ளது. எனவே, நீங்கள் தயவுசெய்து கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். நாங்கள் மற்ற கட்சிகளை வைத்து, விஜய்யையும் வைத்து தி.மு.க.வை முதலில் வீட்டுக்கு அனுப்புகிறோம். அதன்பிறகு நாம் ரகசியமாக கூட்டணி வைத்து கொள்ளலாம்,” என்று பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் சமீபத்தில் அளித்த யூடியூப் பேட்டிகளில் தெரிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணிக்கு விஜய் வராவிட்டால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது என்பது எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாக தெரிந்துவிட்டது என்பதும், எனவேதான் விஜய், வி.சி.க. உட்பட சில கட்சிகளை வரவழைக்க வேண்டும் என்றால், அதற்கு கண்டிப்பாக பா.ஜ.க. கூட்டணியில் இருக்கக் கூடாது என்பதை அவர் தற்போது நன்றாகப் புரிந்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது. இனிமேல் அடுத்த கட்டமாக, பா.ஜ.க.வைப் பகைத்து கொள்ளாமல் நட்பு முறையில் கூட்டணியில் இருந்து வெளியேற்ற பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறப்படுவதுதான் தமிழக அரசியலில் பெரிய ‘ட்விஸ்ட்’டாக பார்க்கப்படுகிறது.

பாஜகவை பொருத்தவரை தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் முதல் கட்டக் குறிக்கோள். அந்தக் குறிக்கோள் நிறைவேற வேண்டுமென்றால், சில தியாகங்களை செய்ய வேண்டும். எனவே, பா.ஜ.க.கூட்டணியில் இருந்து வெளியேற சம்மதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

விஜய், விடுதலை சிறுத்தைகள் உட்பட சில கட்சிகளுடன் சேர்ந்து தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, அதன் பிறகு ரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ பா.ஜ.க.வுடன் கைகோர்த்து கொள்ளலாம் என்பதுதான் தற்போது அ.தி.மு.க. தலைமையின் திட்டமாக இருப்பதாக அந்த அரசியல் விமர்சகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.